விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
Special Buses : விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து செப்டம்பர் 14, 2026 நாளை முதல் மக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பவார்கள் என்பதால் பேருந்துகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை சமாளிக்க தமிழக அரசு சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 13 : சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என தொடர் விடுமுறை காரணமாக பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் விடுமுறை முடிந்து செப்டம்பர் 14, 2026 நாளை முதல் மக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பவார்கள் என்பதால் பேருந்துகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை சமாளிக்க தமிழக அரசு சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து செப்டம்பர் 14, 2026 மற்றும் செப்டம்பர் 15, 2026 என அடுத்த 2 நாட்கள் மதுரை, திருச்சி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : Tamil Nadu Weather now : தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை




விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள்
இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சென்னை திரும்புவதற்காக, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக செப்டம்பர் 14, 2026 அன்று 2,240 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து 300 பேருந்துகள், திருச்சியில் இருந்து 255 பேருந்துகள், சேலம் 200 பேருந்துகள், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் வேலூரில் இருந்து 195 பேருந்துகள், கோயம்புத்தூரில் இருந்து 50 பேருந்துகள், நாகர்கோவிலில் இருந்து 50 பேருந்துகள், தூத்துக்குடியில் இருந்து 50 பேருந்துகள்,தென்காட்சியில் இருந்து 50 பேருந்துகள், கும்பகோணத்தில் இருந்து 225 பேருந்துகள், திருவண்ணாமலையில் இருந்து 325 பேருந்துகள் விழுப்புரத்தில் இருந்து 185 பேருந்துகள் மற்றும் இதர ஊர்களில் இருந்து 30 5 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15, 2026 அன்று 1,325 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி திருச்சியில் இருந்து 105 பேருந்துகள், மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து 75 பேருந்துகள், சேலத்தில் இருந்து 75 பேருந்துகள், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் வேலூரில் இருந்து 200 பேருந்துகள், கோயம்புத்தூரில் இருந்து 20 பேருந்துகள், திருநெல்வேலியில் இருந்து 10 பேருந்துகள், நாகர்கோவிலில் இருந்து- 10 பேருந்துகள், தூத்துக்குடியில் இருந்து 15 பேருந்துகள், தென்காசியிலிருந்து 10 பேருந்துகள், கும்பகோணத்திலிருந்து 125 பேருந்துகள், திருவண்ணாமலையிலிருந்து 175 பேருந்துகள் விழுப்புரத்திலிருந்து 85 பேருந்துகள் மற்றும் இதர ஊர்களிலிருந்து 420 பேருந்துகள் என கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மட்டும் மொத்தம் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : விநாயகர் சதுர்த்தி – நாளை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம்
மேலும், மாதவரம் பேருந்து முனையத்திற்கு 160 சிறப்புப் பேருந்துகளும், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 370 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை வந்தடையும் பயணிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரும் பொதுமக்கள், அங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு எளிதாகவும் விரைவாகவும் செல்லும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.