AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் – கொடியசைத்து துவக்கிவைத்த முதல்வர் விஜய்

CM Vijay Flags Off Le Mans Cup Race : நடிகர் அஜித் குமார் பங்கேற்ற லீ மேன்ஸ் கப் கார் பந்தயத்தை முதல்வர் விஜய்  கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  முன்னதாக   முதல்வர் விஜய் ஓடி சென்று நடிகர் அஜித்தை கட்டிப்பிடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் கவனம் பெற்றுள்ளன.

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் – கொடியசைத்து துவக்கிவைத்த முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Sep 2026 22:31 PM IST

நடிகரும் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்ற லீ மேன்ஸ் கப் கார் பந்தயத்தை முதல்வர் விஜய்  கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக காரில் உட்கார்ந்து கார் ரேஸிற்கு தயாரான நடிகர் அஜித்திற்கு நேரில் சென்று கைகொடுத்து அவர் ரேஸில் வெற்றி பெற முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். இது தொடரபான வீடியோ சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

முன்னதாக   முதல்வர் விஜய் ஓடி சென்று நடிகர் அஜித்தை கட்டிப்பிடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் கவனம் பெற்றுள்ளன. தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களாக இருந்த இருவரும் தற்போது நட்பு பாராட்டுவது இருவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுக்கு காரணம் என்ன? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

கார் ரேஸை துவங்கி வைத்த முதல்வர் விஜய்

 

சமீபத்தில் இந்த கார் ரேஸ் குறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அஜித் குமார்,  தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தனது பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் எனது அழைப்பை ஏற்று நேரம் ஒதுக்கி நம்மைச் சந்திக்க வந்துள்ளார். நாங்கள் கடந்த 34 ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றி இருந்தோம். அவர் தற்போது, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் அழைப்பை ஏற்று வந்து இதைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி என அதில் கூறியிருந்தார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் அஜித் மற்றும் முதல்வர் விஜய்யின் சந்திப்பு நடக்கவிருக்கும் நிலையில், ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என முதல்வர் விஜய் விதி எண்.110-ன் கீழ் சில நாள்களுக்கு முன் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிடத் திட்டமிடப்பட்டது.

இதையும் படிக்க : தவெக அரசின் 4 மாத ஆட்சி சாதனை அல்ல… பெரும் வேதனை… திராவிட கழக வீரமணி கடும் தாக்கு!

இந்த நிலையில் கார் ரேஸை துவங்கி வைப்பதற்காக  முதல்வர் விஜய் சில்வர்ஸ்டோன் வந்தடைந்த முதல்வர் விஜய்யிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக ரசிகர்கள் குவிந்துள்ளனர். அதன் பிறகு, தனது நண்பரும், சக நடிகருமான அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். கார் ரேஸரான அஜித் மற்றும் முதல்வர் விஜய் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்துள்ளனர்.  இந்நிலையில் இருவருமே தங்களின் ரசிகர்களை பார்த்து கையசைத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

Follow Us