AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழ் சினிமாவின் டாம் க்ரூஸ் – நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய கார் ரேஸ் வர்ணனையாளர்

Tom Cruise of Tamil Cinema : லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோனில் செப்டம்பர் 11, 2026 இன்று இரவு தொடங்கவள்ள மிச் செலின் லீ மென்ஸ் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைக்கிறார். இந்த நிலையில் கார் ரேஸ் வர்ணனையாளர் நடிகர் அஜித்தை தமிழ் சினிமாவின் டாம் க்ரூஸ் என தெரிவித்தார்.

தமிழ் சினிமாவின் டாம் க்ரூஸ் – நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய கார் ரேஸ் வர்ணனையாளர்
அஜித் குமார்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Sep 2026 21:23 PM IST

லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோனில் செப்டம்பர் 11, 2026 இன்று இரவு தொடங்கவுள்ள மிச் செலின் லீ மென்ஸ் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைக்கிறார். இதற்காக முதல்வர் விஜய் அஜித் பங்கேற்கு கார் ரேஸ் மைதானத்தை வந்தடைந்தார். அப்போது முதல்வர் விஜய் ஓடி சென்று நடிகர் அஜித்தை கட்டிப்பிடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் கவனம் பெற்றுள்ளன. தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களாக இருந்த இருவரும் தற்போது நட்பு பாராட்டுவது இருவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித்தை டாம் க்ரூஸுடன் ஒப்பிட்ட வர்ணனையாளர்

இந்த நிலையில் முன்னதாக நடைபெற்ற போட்டியில் 8வது இடத்தை பிடித்த அஜித்குமார் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். முன்னதாக அவரது கார் தடுமாறிய போதும் அசராமல் விடாமுயற்சியுடன் மீண்டு வந்து இலக்கை வெற்றிகரமாக இலக்கை அடைந்தார். இதனையடுத்து அவரை ரசிகர்கள் உற்சாகப்படுத்தினர். இதனையடுத்து இறுதிப்போட்டியில் அஜித்துடன் இணைந்து இந்தியாவின் முன்னணி பார்முலா 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

இதையும் படிக்க : பல ஆண்டுகள் நட்பு.. அஜித் குமாரை சந்தித்த முதல்வர் விஜய் – தீயாய் பரவும் வீடியோ!

இந்த நிலையில் இந்தப் போட்டிக்கான டிக்கெட் முன் கூட்டியே விற்றுத்தீர்ந்தது. வழக்கத்தை விட கட்டுக்கடங்காமல் கூட்டம் இருப்பதைப் பார்த்து கார் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். குறிப்பாக முதல்வர் விஜய்யும் இந்தப் போட்டியை பார்வையிட வருவதால் இருவரது ரசிகர்களும் சேர்ந்து கார் ரேஸ் மைதானத்தை தியேட்டராக மாற்றினர். இதனால் ஆச்சரியமடைந்த கார் ரேஸ் வர்ணணனையாளர் அவரை தமிழ் சினிமாவின் டாம் குரூஸ் என கருதுவதாக தெரிவித்தார். இதனை அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய வர்ணனையாளர்

 

சில்வர்ஸ்டோனில் செப்டம்பர் 12, 2026 இன்றிரவு தொடங்கவுள்ள ‘மிச் செலின் லீ மென்ஸ்’ கார் பந்தயத்தை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பை மிச்செலின் லீ மென்ஸ் போட்டிக்கான நிர்வாக குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போட்டி தொடரில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தனது அணி சார்பில் கலந்து கொள்வதால் இருவரும் சந்தித்துக்கொள்ளும் தருணத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது அந்த தருணம் வந்துவி்ட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளும் புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கிறது.

இதையும் படிக்க : லண்டனில் கூடிய ரசிகர்கள்… அஜித் குமார் விடுத்த அன்பான வேண்டுகோள் – வைரலாகும் வீடியோ

முன்னதாக, தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ், அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேட்டியளித்த நடிகர் அஜித், எனது அழைப்பை ஏற்று வந்ததில் மகிழ்ச்சி, லண்டனில் உள்ள ‘சில்வர் ஸ்டோன்’ ரேஸிங் டிராக் போன்றதை சென்னையில் உருவாக்க முதலமைச்சர் விஜய் ஆர்வமாக உள்ளார். எனக்கும் லண்டனில் நடப்பது போன்ற போட்டிகள் சென்னையில் நடைபெற வேண்டும் என்ற ஆசை என்று தெரிவித்தார்

Follow Us