AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரேஸிங் சூட்டில் கையில் தேசியக் கொடியுடன் கெத்து காட்டிய முதல்வர் விஜய் – அஜித்.. ‘லி மான்ஸ் கப்’ ரேஸில் அபார சாதனை!!

CM Vijay Racing Suit: லண்டன் சில்வர்ஸ்டோன் 'லி மான்ஸ் கப்' பந்தயத்தில் 16-வது இடத்தில் இருந்து சீறிப் பாய்ந்த அஜித் குமாரின் 'டீம் விராஜ்' அணி 3-வது இடத்தைப் பிடித்துப் சாதனை படைத்தது. இப்போட்டியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், ரேஸிங் சூட் அணிந்து காரை இயக்கிப் பார்த்ததோடு, அஜித்துடன் இந்திய தேசியக் கொடியை ஏந்தி நின்று ரசிகர்களுக்குப் பெரும் ஆச்சரியம் அளித்துள்ளார்.

ரேஸிங் சூட்டில் கையில் தேசியக் கொடியுடன் கெத்து காட்டிய முதல்வர் விஜய் – அஜித்.. ‘லி மான்ஸ் கப்’ ரேஸில் அபார சாதனை!!
முதல்வர் விஜய், அஜித்குமார்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 Sep 2026 08:15 AM IST

சர்வதேச அளவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் மிகக் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்றாக விளங்குவது ‘லி மான்ஸ் கப்’ (Le Mans Cup) பந்தயமாகும். இத்தொடரின் 5-வது சுற்றுப் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நேற்றைய தினம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், ‘டீம் விராஜ்’ (Team Virage) அணி சார்பில் LMP3 Pro/Am பிரிவில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தொழில்முறை ரேஸருமான அஜித் குமார் பங்கேற்றார். இங்கிலாந்துக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், இப்போட்டியை நேரில் பார்வையிட்டுப் பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தது ஒட்டுமொத்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களையும், தமிழ் மக்களையும் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிக்க: நடிகர் அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் – கொடியசைத்து துவக்கிவைத்த முதல்வர் விஜய்

வெற்றி நிர்ணயிக்கப்படும் முறை:

ஃபார்முலா 1 போன்ற வழக்கமான பந்தயங்களில் 53 சுற்றுகள் (Laps) என்ற குறிப்பிட்ட எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால் ‘லி மான்ஸ் கப்’ பந்தயம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அமைப்பைக் கொண்டது. இதில் சுற்றுகளின் எண்ணிக்கைக்குப் பதிலாக, 1 மணி நேரம் 15 நிமிடங்கள் என்ற கால அளவு நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்தக் கால அளவிற்குள் எந்த ஒரு காரும் ஓட்டுநரும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுகளைக் கடந்து முதலிடத்தைப் பிடிக்கிறார்களோ, அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். வேகத்தை மட்டும் நம்பியிருக்காமல், சீரான ஓட்டம் மற்றும் நேர மேலாண்மையைச் சரியாகப் பின்பற்றுவதே இப்போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

3வது இடத்தை பிடித்த அஜித் அணி:

இந்த நீண்ட பந்தயத்தில் ஒரு ஓட்டுநர் மட்டுமே தொடர்ந்து காரை இயக்க முடியாது என்பதால், கட்டாய ‘பிட் ஸ்டாப்’ எடுக்கப்பட்டு, சக ஓட்டுநருடன் காரைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். நொடிப் பொழுதில் கவனச்சிதறல் ஏற்பட்டாலும் பெரிய அளவிலான விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளதால், ஓட்டுநர்களுக்குத் தீவிர மனக் குவியலும், கூர்மையான பார்வையும், உடற்தகுதியும் மிக அவசியமாகும். பந்தயப் பாதையில் ஏற்படும் விபத்துகள் குறித்து எச்சரிக்கப் பயன்படுத்தப்படும் ‘மஞ்சள் கொடி’ போன்ற சிக்னல்களைக் கவனித்து, அதற்கு ஏற்ப வேகத்தைக் கட்டுப்படுத்தி அஜித்தும் அவரது அணியும் களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன் காரணமாக தொடக்கத்தில் 16வது இடத்தில் இருந்து அஜித் அணி, போட்டியின் முடிவில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

ரேஸிங் சூட்டில் முதல்வர் விஜய்:

இதனிடையே, போட்டிக்கு இடையே முதல்வர் விஜய் ரேஸிங் சூட் உடன் வந்து அங்கிருந்த ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அவர் ரேஸிங் உடையுடன் ஸ்கேட்டிங் போர்டில் வளம் வந்தது, தொடர்ந்து ரேஸிங் டிராக்கில் நடந்து சென்றது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. அவர் பந்தயத்தில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், ரேஸிங் காரை ஓட்டிப் பார்த்ததாக தெரிகிறது.

இதையும் படிக்க: பல ஆண்டுகள் நட்பு.. அஜித் குமாரை சந்தித்த முதல்வர் விஜய் – தீயாய் பரவும் வீடியோ!

தேசியக்கொடியுடன் அஜித் – விஜய்:

தொடர்ந்து, லண்டன் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்கியூட்டில் கார் பந்தய போட்டிகள் நிறைவடைந்த பின்னர் இந்திய தேசியக் கொடியுடன் முதலமைச்சர் விஜய் – அஜித்குமார் தோன்றினர். இதுதொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில் இருவருமே ரேஸிங் உடையில் தோன்றியது அவர்களது ரசிகர்களிடையே இன்னும் அளவில்லா உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Follow Us