திமுக அடிபட்ட புலியாக களத்தில் இருக்கிறது.. வட்டியும், முதலுமாக திருப்பி கொடுப்போம்.. பி.கே.சேகர் பாபு ஆவேசம்!
P. K. Sekar Babu Criticized CM Vijay : திராவிட முன்னேற்றக் கழகம் அடிபட்ட புலியாக களத்தில் நின்று கொண்டிருக்கிறது. இதற்கு நிச்சயமாக வட்டியும், முதலுமாக சேர்த்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு திருப்பி கொடுப்போம் என்று முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பேச்சை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபு பங்கேற்று பேசியதாவது: தமிழக அரசியல் களத்தில் இருக்கும் தலைவர்களை ஒரு சேர நிறுத்தி அந்த அரசியல் தலைவர்களில் தியாகத்தாலும், ஆளுமையாலும் ஓங்கி நிற்கின்ற ஒரே தலைவர் மு. க. ஸ்டாலின் மட்டுமே. இவரை சட்டமன்றத்தில் விமர்சித்ததற்காக ஒரு டவுசர் பார்ட்டி… டேய் நிர்மல் குமார்… இவ்வாறு சட்டமன்றத்தில் ஓங்கி குரல் எழுப்பினோம். 5 ஆண்டுகள் மத்திய அரசை எதிர்த்து சண்டை செய்த ஒரே கட்சி திமுக மட்டுமே. அது மு. க. ஸ்டாலின் என்றால் மிகை ஆகாது. அந்த ஆளுமையே ஓடவிட்டால் இன்று மேடையில் ஓடு… ஓடு… என்று காட்டிக் கொண்டிருந்த ஓடுகாலி முதலமைச்சரை விஜய்யை தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஓட விட்டுள்ளார்.
ஓடுகாலி முதலமைச்சர் ஜோசப் விஜய்
ஓடும்போது நான் திங்கள்கிழமை பதில் சொல்ல வருவேன். யாரையும் ஓட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார். சட்டமன்றத்தில் ஒரு மணி நேரம் சினிமா பாணியில் முதல்வர் வசனத்தை பேசியுள்ளார். அந்த ஒரு மணி நேரமும் எதிர்த்து நின்று பேசுவதற்கு திமுக சார்பில் வாய்ப்பு கேட்டோம். ஆனால், எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தெம்பற்ற, திராணியற்ற முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பே கொடுக்காமல் பேசியுள்ளார்.




மேலும் படிக்க: தவெக அரசின் 4 மாத ஆட்சி சாதனை அல்ல… பெரும் வேதனை… திராவிட கழக வீரமணி கடும் தாக்கு!
டவுசர் பார்ட்டி நிர்மல் குமாருக்கு பதிலடி
சட்டமன்ற நிகழ்வில் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தால் தெரிந்து இருக்கும். ஒரு சட்டமன்ற நிகழ்வில் இந்த டவுசர் பார்ட்டி நிர்மல் குமார் கரூர் கம்பெனி என்று தெரிவித்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் எழுந்து சங்கி அமைச்சர் என்று பதிலடி கொடுத்தார். இதற்கு இரண்டரை மணி நேரம் கழிப்பறையில் இருந்ததாக நிர்மல் குமார் தெரிவித்தார். அதற்கும், யார் யார் எவ்வளவு நேரம் கழிப்பறையில் இருக்கிறார்கள் என்பதை கணக்கெடுப்பதற்கும் அமைச்சர்கள் இருக்கிறார்களா என்று பதிலடி கொடுத்தார். தலைவா என்ற படத்துக்காக கொடநாட்டில் ஓடி சென்று நின்றவர் யார்.
தைரியமற்ற, தெம்பற்ற முதலமைச்சர் நேரடித் தாக்குதல் செய்த சேகர்பாபு #sekerbabu #pksekarbabuspeech #cmvijay #tvkvsdmk #thalapathyvijay #mkstalin #misaact #arrowroots pic.twitter.com/w4B1EoEySs
— Arrowroots Media (@arrowrootsmedia) September 12, 2026
அடிப்பட்ட புலியாக களத்தில் திமுக- வட்டியும்,முதலும் கொடுப்போம்
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், விமான நிலையத்தில் ஓடு… ஓடு… என்று ஓடிய தலைவர் யார். திறமையற்ற, தெம்பற்ற ஓடுகாலி நாயே… சட்டமன்றம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசக்கூடாது. அடிபட்ட புலியாக திமுக களத்தில் நின்று கொண்டிருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் வட்டியும், முதலும் ஆக சேர்த்து ஓடுகாலி நாய்களுக்கு திருப்பிக் கொடுப்போம் என்று ஆக்ரோஷமாக பேசினார்.
மேலும் படிக்க: என் தலைவரை ( மு.க.ஸ்டாலினை) தொட்டவரை விடமாட்டோம்.. திமுக போராட்டத்தில் மேயர் ஆர். பிரியா ஆவேசம்!