Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் செப்.15, 16 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வரும் நாட்களிலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வருகிற செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை, செப்டம்பர் 12 : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வரும் நாட்களிலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் 15, 16, 2026 ஆகிய 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்லதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் தனியார் வானிலை நிபுணர் ஹேமச்சந்திரன் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செப்.15, 16 2நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் செப்டம்பர் 15, 2026 முதல் செப்டம்பர் 22, 2026 வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர். திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர். கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி உள்பட 21 மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : கணவரை பிரிந்து தனியாக வசித்த பெண்.. கழுத்தறுத்த நிலையில் சடலமாக மீட்பு.. திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்!




மேலும் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் செப்டம்பர் 12, 2026 இன்று மிதமான மழையும், வரும் செப்டம்பர் 13, 2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 14, 2026 மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இதையும் படிக்க : பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. குடியிருப்போர் கணக்கெடுப்பு தொடக்கம்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!
அதேபோல், வரும் செப்டம்பர் 15,2026 நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், வரும் 16ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.