என் தலைவரை ( மு.க.ஸ்டாலினை) தொட்டவரை விடமாட்டோம்.. திமுக போராட்டத்தில் மேயர் ஆர். பிரியா ஆவேசம்!
Chennai Mayor Priya Speech : எனது தலைவரை தொட்டவர்களை விடமாட்டோம் என்று சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா தெரிவித்தார். முதல்வர் விஜய் பேச்சை கண்டித்து நடைபெற்ற திமுக போராட்டத்தில் மேயர் பிரியா இவ்வாறு கூறினார். முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் மிசா குறித்தும், மு.க. ஸ்டாலின் குறித்தும் பேசியதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்று பேசியதாவது: மிசா சட்டத்தை பற்றி தவெகவினருக்கு என்ன தெரியும். நீங்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்த்து கேள்வி கேட்கலாமா. அந்த தகுதி தவெகவுக்கு உள்ளதா. சட்டப்பேரவையில் என்ன பேச வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு சொல்லித் தரவில்லை. இதில், பயிற்சி பட்டறை வேறு கொடுத்துள்ளீர்கள். யாரை சீண்டி பார்த்து உள்ளீர்கள் தெரியுமா. தெரியாமல் சீண்டி உள்ளீர்கள். நாங்களாக பிரச்சனைக்கு போக மாட்டோம். ஆனால், என்ன பிரச்சனை வந்தாலும் என்னைக்கும் விடமாட்டோம்.
சட்டமன்றத்தில் 3 மணி நேரம் முதல்வர் நடித்துள்ளார்
நீங்கள் விட்டாலும், நாங்கள் அந்த பிரச்சனையை விட மாட்டோம். படத்தில் 3 மணி நேரம் நடிப்பது போன்று ஒரு மணி நேரம் சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பேசி விட்டு சென்றுள்ளார். தமிழகத்தின் வரலாறு என்ன. அண்ணா மற்றும் கருணாநிதி, மு. க. ஸ்டாலின் தமிழையும், தமிழ்நாட்டையும் வளர்ப்பதற்கு எவ்வளவு பாடுபட்டுள்ளனர் என்று தமிழக மக்கள் பார்த்துள்ளனர். இன்று மிசா சட்டத்தை சட்டப்பேரவையில் பேசி உள்ளீர்கள். மிசா சட்டம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியும்.
மேலும் படிக்க: மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்.. தேர்தல் பணிக்குழுவை அறிவித்தது தவெக!




எனது தலைவரை தொட்டவரை விடமாட்டோம்
புறமுதுகை காட்டிக் கொண்டு ஓடு ஓடு ஓடு என்று ஓடிவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை செல்லக்கூடாது என்று சொல்லி உள்ளனர். அப்படி சொல்லிவிட்டு நீங்கள் ஏன் ஓடினீர்கள். தமிழகத்தில் நடப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். என் தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன் என்று சொல்வார்கள். அதே போல, எனது தலைவரை தொட்டது யாராக இருந்தாலும்… அது மாண்புமிகுவாக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம் என்று பரபரப்பாக பேசினார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதன் பின்னணி
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, மிசா சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்தும், சர்க்காரியா கமிஷன் குறித்தும் முதல்வர் விஜய் ஆக்ரோஷமாக பேசி இருந்தார். இதில், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்றும், அந்த சட்டம் குறித்து அனைவருக்கும் எல்லாம் தெரியும் என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனை கண்டித்து தான் தற்போது திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மேயர் பிரியா மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதியில்லை… அமைச்சர் வன்னி அரசு!