AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்.. தேர்தல் பணிக்குழுவை அறிவித்தது தவெக!

Maduranthakam- Dharapuram By Election : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி குழுவை அமைத்து தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இதில், யார் யார் இடம் பெற்றுள்ளார்கள் என்ற விவரத்தை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்.. தேர்தல் பணிக்குழுவை அறிவித்தது தவெக!
முதல்வர் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 12 Sep 2026 11:50 AM IST

தமிழகத்தில் அக்டோபர் 6- ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கட்சிகள் சார்பில் தேர்தல் பணி குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணி குழுவும், பணிகளை கண்காணிக்க மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,

மேலும் படிக்க: தவெக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும்.. கம்யூனிஸ்ட் கட்சியை டார்கெட் செய்கிறாரா… கே.ஏ. செங்கோட்டையன்!

தேர்தல் கண்காணிப்பாளர்கள்

  • நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்.
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன்.
  • மின்சாரத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார்.

மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதி (தேர்தல் பணிக்குழு)

பொறுப்பாளர்:

  • பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

இணை பொறுப்பாளர்கள்:

  • அமைச்சர் ராஜ்குமார்.
  • அமைச்சர் தென்னரசு.
  • அமைச்சர் வினோத்.

துணை பொறுப்பாளர்கள்

  • சரவண மூர்த்தி ( சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்).
  • தியாகராஜன் ( செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்).
  • விஜயராஜ் ( திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்).
  • காமாட்சி ( பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்).
  • எம். எஸ். பாலாஜி என்ற மணிகண்டன் ( செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர்).

தாராபுரம் ( தனி) சட்டமன்ற தொகுதி:-

பொறுப்பாளர்கள்:

  • சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். அருண் ராஜ்.

இணை பொறுப்பாளர்கள்:

  • கைத்தறி நூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி.
  • பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி.
  • வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

துணை பொறுப்பாளர்கள்:

  • பாலமுருகன் ( திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்).
  • சத்தியபாமா ( திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்).
  • ராம்குமார் ( பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்).
  • திலீப் ( நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்).
  • சத்தியா ( கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்).

தவெக வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்

ஆகியோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பணிகளை கண்காணிப்பார்கள். அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட கட்சியினர் அனைவரும் இந்த குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவெகவின் விசில் சின்னம் மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட தொகுதிகளில் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தவெக சார்பில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதியில்லை… அமைச்சர் வன்னி அரசு!

Follow Us