AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதியில்லை… அமைச்சர் வன்னி அரசு!

Minister Vanni Arasu Latest Speech : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு சமூக நீ தி குறித்து பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை என்று அந்தக் கட்சியின் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்து உள்ளார் .

சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதியில்லை… அமைச்சர் வன்னி அரசு!
திருமாவளவன்- வன்னி அரசு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 12 Sep 2026 11:16 AM IST

விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு சமூக நீதி குறித்து பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை என்றார் அமைச்சர் வன்னி அரசு. இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு கடந்த 2019- ஆம் ஆண்டு 103- ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதே போல, அடுத்த ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த சட்டத்துக்கு தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலும் அளித்துள்ளார். இதனை எதிர்த்து விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மிகச்சிறந்த அரசியலமைப்பு சட்ட அறிஞர் வழக்கறிஞர் கௌதம் பாட்டியா தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு இடபிள்யூஇ சட்டத்தை எதிர்த்து மிகவும் விரிவான குற்றப் அபிடவிட்டை தாக்கல் செய்திருந்தது.

ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு

இந்த வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா எழுச்சித்தமிழர் சார்பில் 34 பக்க எழுத்து பூர்வ வாதத்தை சமர்ப்பித்து இருந்தார். திருமாவளவன் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்டோரின் வழக்கில் கடந்த 2022- ஆம் ஆண்டு பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் 3:2 என்ற கணக்கில் தீர்ப்பளித்தது. மருத்துவ படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை சந்தித்து வலியுறுத்தி இருந்தார்.

மேலும் படிக்க: இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவா? திடீர் நிபந்தனை விதித்த இந்திய கம்யூனிஸ்ட்? என்ன அது!

கிரிமிலேயர் நடைமுறையை ரத்து செய்யக்கோரி போராட்டம்

இதை தொடர்ந்து, தான் திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டங்களை மேற்கொண்டது. ஓபிசி சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 2020- ஆம் ஆண்டு கிரிமிலேயர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இணைய வழியில் திருமாவளவன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்று பேசியிருந்தார்.

சமூக நீதி குறித்து பாடம் எடுக்க தகுதி இல்லை

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கொரோனா உச்சம் தொட்ட காலத்திலும் தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் போராட்டத்தை மேற்கொண்டது. புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பங்கேற்று பேசியிருந்தார். கடந்த 2021- ஆம் ஆண்டு மத்திய அரசு ஓபிசி பிரிவினருக்கு மருத்துவ படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஒதுக்கீடு வழங்குவதற்கு முன் வந்தது. இது சமூக நீதி இயக்கங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பிரகடனப்படுத்தினார். அப்போது, முன்னேறிய சமுதாயத்தினருக்கு தரப்படும் ஈ.டபிள்யூ.எஸ் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் எதிர்த்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: “கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருக்கணும்!”.. திமுகவை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!!

Follow Us