காதலி பேச மறுத்ததால் சோகம்.. கன்னியாகுமரியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. போலீசார் விசாரணை!
Kanniyakumari Crime News : கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலி பேச மறுத்ததால் மனமுடைந்த காதலன் வீட்டில் சேலையா ல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள தச்சூர் குன்றுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் விஷ்ணு நந்தன் ( 23 வயது). இவர், சுங்கான் கடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இவரும், அந்தப் பெண்ணும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில், விஷ்ணு நந்தன் சம்பவத்தன்று தனது காதலியிடம் பேசுவதற்காக செல்போனில் அவரை தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால், அந்த பெண் தனக்கு உன்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு செல்போன் அழைப்பை துண்டித்ததாக தெரிகிறது. இதனால், மீண்டும் தனது காதலியை விஷ்ணு நந்தன் செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.
வீட்டுக்கு தூங்க சென்ற இளைஞர்
ஆனால், அந்த பெண் அவரது அழைப்பை ஏற்க மறுத்து பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதில், மிகவும் மனம் உடைந்த விஷ்ணு நந்தன் தனது நண்பர்களிடம் இந்த சம்பவத்தை கூறி வருத்தப்பட்டுள்ளார். அப்போது, அவரது நண்பர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, விஷ்ணு நந்தன் வீட்டின் அருகே உள்ள பழைய வீட்டில் இரவில் தூங்க சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை வெகு நேரம் ஆகியும் அந்த வீட்டின் கதவு திறக்காமல் இருந்துள்ளது.
மேலும் படிக்க: மாற்று சமுதாய இளைஞரை திருமணம் செய்த மகள்.. வீடு புகுந்து அரிவாளால் வெட்டித் தள்ளிய தந்தை.. தென்காசியில் கொடூரம்!
வீட்டில் பிணமாக தொங்கிய காதலன்
இதனால், சந்தேகம் அடைந்த விஷ்ணு நந்தனின் தாய் அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால், மேலும் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னலின் வழியாக வீட்டில் உள்ளே பார்த்தபோது, விஷ்ணு நந்தன் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியில் அவர் கத்திய நிலையில், சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தொடர்ந்து, விஷ்ணு நந்தனின் சடலத்தை மீட்டனர்.
திருவட்டார் போலீசார் விசாரணை
இது தொடர்பாக தகவல் அறிந்த திருவட்டார் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலி பேசாததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துவர சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: செங்கல்பட்டில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவர்.. நொடியில் பிரிந்த உயர்.. இதற்காகவா இந்த விபரீத முடிவு!