AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சாலமன் பாப்பையா மறைவு.. அரசு மரியாதை அறிவித்தது தமிழக அரசு!

Solomon Pappaiah Funeral: பிரபல தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், மதுரையில் நடைபெறும் அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சாலமன் பாப்பையா மறைவு.. அரசு மரியாதை அறிவித்தது தமிழக அரசு!
சாலமான் பாப்பையா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Sep 2026 10:48 AM IST

மதுரை, செப்டம்பர் 12: தமிழின் பெருமையையும் தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த புகழ்பெற்ற தமிழறிஞரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவரது மறைவு செய்தி தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வாக மட்டுமே பார்க்காமல், அவற்றைச் சிந்தனையைத் தூண்டும் அறிவுத்தளங்களாக மாற்றிய பெருமைக்குரிய சாலமன் பாப்பையாவின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழ் சான்றோர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: அன்பு தாய்மார்களே!… பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார் – ரசிகர்கள் சோகம்

அமெரிக்கா முதல் மதுரை வரை:

மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சாலமன் பாப்பையா, திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களை எளிய தமிழில் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர். தொலைநோக்கிகள் மற்றும் திரையரங்குகள் மூலம் பட்டிமன்றக் கலை உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம் சென்று சேர முக்கியக் காரணமாக அமைந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ‘சிவாஜி’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துத் தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். மேடைகளில் தனது தனித்துவமான குரலாலும், திருக்குறள் உரைகளாலும் பல தலைமுறைகளைக் கவர்ந்த அவரது மறைவு தமிழ் பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

முதலமைச்சர் விஜய் இரங்கல்:

சாலமன் பாப்பையாவின் மறைவு குறித்துத் தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது நகைச்சுவை கலந்த பேச்சாலும் ஆழ்ந்த தமிழ் புலமையாலும் சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா என்று நினைவுகூர்ந்துள்ளார். பட்டிமன்ற மேடைகளை அறிவு சார்ந்த தளங்களாக உயர்த்தியதில் அவரது பங்கு மகத்தானது என்றும், தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய சேவைகள் என்றும் நினைவில் கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Solomon Pappaiah : பேராசியர்.. நடுவர்.. நடிகர்.. சாலமன் பாப்பையா கடந்து வந்த பாதை!

தமிழக அரசு மரியாதை அறிவிப்பு:

சாலமன் பாப்பையா தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் மொழிக்கும் ஆற்றிய இணையற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில், இன்று நடைபெறும் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைச்சர் சி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார். மதுரையில் உள்ள தத்தனேரி மயானத்தில் இன்று அவரது உடல் தகணம் செய்யப்பட உள்ள நிலையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நிறைவுபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us