AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசியல் களத்தில் அடுத்த புயல்! மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல் நடத்த தடை? உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு!

Maduranthakam - Dharapuram By Election : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என்றும், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் களத்தில் அடுத்த புயல்! மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல் நடத்த தடை? உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு!
சென்னை உயர்நீதிமன்றம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 12 Sep 2026 14:16 PM IST

தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்து வருகின்றன. இதில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 6- ஆம் தேதி மேற்கண்ட இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த இடை தேர்தலை நடத்துவதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தடை விதிக்க வேண்டும். எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்பவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடத்த தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

இந்த மனு தமிழக அரசியல் களத்தில் புதிய புயலை கிளப்பி உள்ளது. ஏற்கனவே, திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு எதிராக எதிர்கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் வழக்குகளை தொடுத்துள்ளனர். இந்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருவதால், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்க மறுத்துள்ளது. அத்துடன், இந்த 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடைக்காலம் வருகிற செப்டம்பர் 28- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதியில்லை… அமைச்சர் வன்னி அரசு!

அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் புயல்

இப்படி இருக்கும் சூழ்நிலையில், தேர்தல் வழக்குகள் எதுவும் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் மற்றும் விராலிமலை ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகள் தீவிரம்

நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். ஏற்கெனவே, மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளில் நிலுவையில் இருக்கும் தேர்தல் வழக்குகள் முடிவடைந்த பின்னரே இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: என் தலைவரை ( மு.க.ஸ்டாலினை) தொட்டவரை விடமாட்டோம்.. திமுக போராட்டத்தில் மேயர் ஆர். பிரியா ஆவேசம்!

Follow Us