BRICS உச்சி மாநாடு தொடக்கம்: போரை கட்டுப்படுத்த முக்கிய ஒப்பந்தம்
BRICS Summit Begins : பிரேசில், ரஷ்யா, சீனா தென்னாப்பிரிக்கா, எகிப்து, ஈரான், இந்தோனேஷியா, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பிரிக்ஸ் என்ற உச்சி மாநாடு செப்டம்பர் 12, 2026 இன்று டெல்லியில் கோலாகலமாக துவங்கியுள்ளது
பிரேசில், ரஷ்யா, சீனா தென்னாப்பிரிக்கா, எகிப்து, ஈரான், இந்தோனேஷியா, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பிரிக்ஸ் என்ற உச்சி மாநாடு செப்டம்பர் 12, 2026 இன்று டெல்லியில் துவங்கியுள்ளது. இதில், மாநாட்டை நடத்தும் நாடான இந்தியாவுடன், ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். உறுப்பு நாடுகள் ஒரு கூட்டுப் பிரகடனத்தை வெளியிட ஒப்புக்கொண்டுள்ளன என்பது இம்மாநாட்டின் முக்கியத் தகவலாக வெளியாகியுள்ளது.
BRICS உச்சி மாநாடு தொடக்கம்
அதன்படி எந்தவொரு நாடும் மேற்கொள்ளும் ஒருதலைப்பட்சமான போர் நடவடிக்கைகளை இந்தப் பிரகடனம் கண்டிக்கும் விதமாக பிரகடனத்தை உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, ஈரான், இந்தோனேசியா, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இக்குழுவின் வருடாந்திர உச்சிமாநாடு, இந்தியாவின் தலைமையில் புது தில்லியில் இந்த வாரம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க : ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறளை பரிசளித்த பிரதமர் மோடி – வைரலாகும் வீடியோ




அதேவேளையில், வளைகுடாப் பகுதியில் வெடித்த மோதலுக்குப் பிறகு கருத்து வேறுபாடுகள் கொண்ட நாடுகளாக மாறியுள்ள ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியைக் குறைத்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் கூட்டுப் பிரகடனத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகளிலும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : அன்று விமர்சனம்.. இன்று உலகின் கவனம்! BRICS-ல் இந்தியாவின் புதிய பலம்
பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் கூட்டுப் பிரகடனம் குறித்து ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இக்குழு ஒரு கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டாலும், அதில் எந்தவொரு குறிப்பிட்ட நாட்டின் பெயரும் நேரடியாகக் குறிப்பிடப்படாது; மாறாக, எந்தவொரு நாடும் தொடங்கும் ஒருதலைப்பட்சமான போர் நடவடிக்கை கண்டிக்கப்படும். உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இன்று (சனிக்கிழமை) இந்தப் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.