ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறளை பரிசளித்த பிரதமர் மோடி – வைரலாகும் வீடியோ
PM Modi Gifts Thirukkural : பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவரின் எழுதிய திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை பரிசாக வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையேயான சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி இந்தியா வந்துள்ள, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். அப்போது அவருக்கு திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை பரிசாக வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையேயான சந்திப்பு செப்டம்பர் 11, 2026 இன்று டெல்லியில் நடைபெற்றது. 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெற்ற இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, பிரதமர் மோடி புடினுக்கு திருக்குறளின் ரஷ்ய பதிப்பை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியாவில் செப்டம்பர் 12, 2026 மற்றும் செப்டம்பர் 13, 2026 ஆகிய 2 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செப்டம்பர் 11, 2026 இன்று இந்தியா வந்தார். மாநாட்டின் ஒருபகுதியாக பிரதமர் மோடி மற்றும் புடின் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந்த சந்திப்பு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.




இதையும் படிக்க : 18வது பிரிக்ஸ் மாநாடு.. டெல்லி வரும் உலக தலைவர்கள்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறளை பரிசளித்த பிரதமர் மோடி
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin hold a bilateral meeting on the sidelines of BRICS Summit 2026.
(Video Source: DD News) pic.twitter.com/KhlCIatMI2
— ANI (@ANI) September 11, 2026
இந்த சந்திப்பின் போது இந்தியா – ரஷ்யா இடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான பொருளாதார ரீதியிலான ஒப்பந்தங்கள் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவது தொடர்பான இலக்கு குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : BRICS 2026 மாநாட்டுக்கு இந்தியா தயார் – பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பது, நிறுவனங்களுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது மற்றும் ரஷ்ய சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.