AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆசிரியர் தினம்.. தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்! வழங்கிய அறிவுரைகள்..

மாணவர்களுக்கு பொதுமேடை பேச்சு கற்றுக்கொடுக்கும் மற்றொரு ஆசிரியரிடம், "நான் உங்கள் மாணவர் என்று வைத்துக்கொண்டால், சிறந்த பேச்சாளராக வளர எனக்கு என்ன ஆலோசனை வழங்குவீர்கள்?" என பிரதமர் கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர், தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதுடன் பிரதமர் மோடியின் பேச்சாற்றல் மற்றும் ஆளுமையிலிருந்து கற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

ஆசிரியர் தினம்.. தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்! வழங்கிய அறிவுரைகள்..
ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Sep 2026 10:36 AM IST

செப்டம்பர் 5, 2026: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து கலந்துரையாடினார். புதுடெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக உரையாடினார். சமுதாயத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் ஆற்றிவரும் முக்கியப் பங்கை பிரதமர் பாராட்டியதுடன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சேவைகளையும் நினைவுகூர்ந்தார்.

ஆசிரியர்களுடன் நகைச்சுவையாக உரையாடிய பிரதமர் மோடி:


இந்த சந்திப்பின்போது ஆசிரியர்கள் தங்களது கற்பித்தலில் மேற்கொண்டு வரும் புதுமையான முயற்சிகளை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டனர். மாணவர்களுக்கு நேர்காணல் நடத்த கற்றுக்கொடுத்து வருவதாக ஒரு ஆசிரியை தெரிவித்தார். அதற்கு, “அப்படியானால் உங்கள் மாணவர்கள் வீட்டில் பெற்றோரிடம் ஏன் சமையல் செய்தீர்கள் என்று கேட்கிறார்களா?” என பிரதமர் மோடி நகைச்சுவையாகக் கேட்க, அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

அதேபோல், மாணவர்களுக்கு பொதுமேடை பேச்சு கற்றுக்கொடுக்கும் மற்றொரு ஆசிரியரிடம், “நான் உங்கள் மாணவர் என்று வைத்துக்கொண்டால், சிறந்த பேச்சாளராக வளர எனக்கு என்ன ஆலோசனை வழங்குவீர்கள்?” என பிரதமர் கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர், தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதுடன் பிரதமர் மோடியின் பேச்சாற்றல் மற்றும் ஆளுமையிலிருந்து கற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

பழங்குடியின மாணவர்களுக்கு நம்பிக்கை:

ஏகலவ்ய மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் மூலம், பள்ளிக்கூடமே சென்றிராத குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் தற்போது என்.ஐ.டி., ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் அளவுக்கு முன்னேறி வருவதாக ஒரு ஆசிரியர் பிரதமரிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க: மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு.. தமிழகம் உட்பட 7 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வைத்த கோரிக்கை..

மேலும், பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் குறித்து பெண் ஆசிரியர் ஒருவர் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, தனது தொகுதியான காசியில் மிகப்பெரிய அளவில் புற்றுநோய் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டதை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.

Follow Us