போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி…. விமானியை பணிநீக்கம் செய்த ஏர் இந்தியா
Air India Pilot Terminated : பூக்கெட்டிலிருந்து ஆகஸ்ட் 4, 2026 நேற்று டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்திய விமானத்தில் பயணத்தின் போது ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானியின் பரிசோதனை முடிவுகளில் போதைப்பொருட்களின் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்து அதிர்சியை ஏற்படுத்தியது.
பூக்கெட்டிலிருந்து ஆகஸ்ட் 4, 2026 நேற்று டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்திய விமானத்தில் பயணத்தின் போது ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானியின் பரிசோதனை முடிவுகளில் போதைப்பொருட்களின் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்து அதிர்சியை ஏற்படுத்தியது. இதனயடுத்து விமானியை ஏர் இந்தியா உடனடியாக பணிநீக்கம் செய்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில்,போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய விமானியை பணிநீக்கம் செய்த ஏர் இந்தியா
விமானத்தில் மொத்தம் 145 பேர் பயணித்த நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூகெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்திய விமானம் சுமார் 36,000 அடி பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பச்சை ஹைட்ராலிக் அமைப்பில் அழுத்தம் குறைந்தது. சில வினாடிகளுக்குப் பிறகு, நீலம் மற்றும் ‘மஞ்சள் ஹைட்ராலிக் அமைப்புகளிலும் அழுத்தம் குறைந்தது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, ஆட்டோ பைலட் செயலிழந்தது. இதனையடுத்து விமானத்தின் வேகம் குறைந்து கட்டுப்பாட்டை இழக்கும் அபாயத்தைக் குறிக்கும் ஸ்டால் எச்சரிக்கை ஒலி சிறிது நேரம் கேட்டது. இதனையடுத்து சில நிமிடங்களி நிலைமை சீரானது. இருப்பினும் சில பயணிகளுக்கு இதில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : அம்மான்னா சும்மாவா.. மகளின் கல்விக்காக வெறுங்காலில் மாரத்தான் ஓடி வென்ற தாய்.. மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி!
டெல்லிக்கு வந்தடைந்ததும், 20 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் உட்பட 24 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. அவர்களில் இருபது பேர் சிறிய காயங்களுக்குச் சிகிச்சை பெற்ற பிறகு விடுவிக்கப்பட்டனர், அதே சமயம் பலத்த காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமானத்தின் உட்புறத்தில் பல இடங்களில் சேதம் காணப்பட்டது. இதில் விமானத்தின் உள் பாகங்கள் சேதமடைந்திருக்கின்றன.
விசாரணையின் போது, விமானத்தின் டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் ஆகியவற்றிலிருந்து டேட்டாகள் சேகரிக்கப்பட்டன. ஏர்பஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் விமானத்தைப் பார்வையிட்டனர்.
இதையும் படிக்க : இலங்கை கதவுகள் திறக்கப்பட்டன.. இந்தியாவில் இருந்து தடையின்றி தாயகம் செல்லலாம்.. Sri Lanka அரசின் மாஸ் பிளான்!
ஏர் இந்தியாவின் கூற்றுப்படி, பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விமான நிறுவனத்தின் விமானிகள் கடுமையான பயிற்சி, திறன் சோதனைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைத் தரநிலைகளுக்கு ஏற்ப இச்சோதனைகள் நடத்தப்படுகின்றன.