AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : சரிந்தது தங்கம் விலை.. ரூ.1,360 குறைவு.. இன்றைய விலை நிலவரம் என்ன?

September 14th Gold and Silver Price | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : சரிந்தது தங்கம் விலை.. ரூ.1,360 குறைவு.. இன்றைய விலை நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 05 Sep 2026 10:34 AM IST

சென்னை, செப்டம்பர் 05 : தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, நேற்று (செப்டம்பர் 04, 2026) அதிரடி விலை உயர்வை சந்தித்த தங்கம், இன்று கடும் சரிவை சந்தித்தது. அதாவது, இன்று தங்கம் விலை ரூ.1,360 சரிவை சந்தித்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்

2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கு சிறந்த ஆண்டாக அமையவில்லை. காரணம், இந்த ஆண்டு முழுவதுமே தங்கம் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு மாதம் உயர்வை சந்திக்கும் தங்கம், அடுத்த மாதம் தொடர் சரிவை சந்திக்கிறது. இல்லை மாதத்தில் 15 நாட்கள் உயர்வை சந்திக்கும் தங்கம், அடுத்த 15 நாட்கள் சரிவை சந்திக்கிறது. இவ்வாறு தொடர் ஏற்ற, இறக்கங்களையே தங்கம் சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : காசை கரியாக்கும் “Impulsive Buying”.. அதிக செலவுகளை தவிர்க்க உதவும் 3 வழிகள்!

உதாரணமாக ஆகஸ்ட் மாதம் கடும் உயர்வை சந்தித்து வந்த தங்கம், மாத கடைசியில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இவ்வாறு தொடர் ஏற்ற, இறக்கங்களையே தங்கம் சந்தித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (செப்டம்பர் 05, 2026) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும், சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,480-க்கும், ஒரு சவரன் ரூ.1,23,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : யூடியூபில் பார்த்த ரெசிபி மூலம் தொடங்கிய தொழில்.. இன்று மாதம் ரூ.25 லட்சம் வருமானம்.. அசத்தும் போபால் இளைஞர்!

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும் , ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us