AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

18வது பிரிக்ஸ் மாநாடு.. டெல்லி வரும் உலக தலைவர்கள்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?

BRICS Summit: பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், சுகாதாரம், வேளாண்மை, எரிசக்தி, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

18வது பிரிக்ஸ் மாநாடு.. டெல்லி வரும் உலக தலைவர்கள்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாடு
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Sep 2026 08:57 AM IST

செப்டம்பர் 11, 2026: டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு, தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகத் தலைவர்களை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பதாகைகள் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லிக்கு வரும் முக்கிய தலைவர்கள்:

11 உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில், மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போர்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகள், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்கனவே டெல்லி வந்துள்ளார். பிரதமர் மோடி, புதின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருவதால், பிரதமர் மோடியுடனான சந்திப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க: BRICS 2026 மாநாட்டுக்கு இந்தியா தயார் – பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ

பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி:

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், சுகாதாரம், வேளாண்மை, எரிசக்தி, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு 45 நாட்கள் வேண்டாம்.. சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு!

மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் சுமார் 15,000 காவல்துறையினர், 200 துணை ராணுவப் படை குழுக்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 35-க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் தற்காலிக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

சிறப்பு ஏற்பாடுகள் என்ன?

இதனிடையே, பிரிக்ஸ் தலைவர்களுக்காக டெல்லியின் முன்னணி நட்சத்திர விடுதிகள் சிறப்பு இந்திய உணவு வகைகளை தயாரித்துள்ளன. தாஜ் மஹால் ஹோட்டலில் காஷ்மீர் மசாலா வால்நட்ஸ், மகாராஷ்டிராவின் பகர்வடி, ராஜஸ்தானின் மினி கச்சோரி, தமிழகத்தின் முறுக்கு உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள் இடம்பெற்றுள்ளன.

தி லீலா பேலஸ் சார்பில் ரோஜா, குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்பட்ட உண்ணக்கூடிய தாமரை வடிவ இனிப்பு மற்றும் சிறுதானிய குக்கீகள் வழங்கப்படுகின்றன. தி லாலிட் ஹோட்டலில் கலோட்டி கபாப், தந்தூரி ரொட்டிகள், சிறுதானிய உணவுகள் உள்ளிட்ட சிறப்பு மெனு தயாரிக்கப்பட்டுள்ளது.

Follow Us