AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ENG vs PAK: டெஸ்ட் வரலாற்றில் அதிக அரைசதங்கள்.. சச்சினை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்!

Joe Root Most Test Fifty Record: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சாதனை சச்சின் டெண்டுல்கரிடம் உள்ளது. அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை 200 போட்டிகளில் 329 இன்னிங்ஸ்களில் 15,921 ரன்களுடன் முடித்தார். இந்தப் பட்டியலில் ஜோ ரூட் இரண்டாம் இடத்தில் உள்ளார். இதுவரை, ரூட் 169 டெஸ்ட் போட்டிகளில் 309 இன்னிங்ஸ்களில் 50.45 சராசரியில் 14,278 ரன்கள் எடுத்துள்ளார்.

ENG vs PAK: டெஸ்ட் வரலாற்றில் அதிக அரைசதங்கள்.. சச்சினை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்!
ஜோ ரூட் - சச்சின் டெண்டுல்கர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Sep 2026 18:15 PM IST

இங்கிலாந்தின் டெஸ்ட் (Test Cricket) கேப்டனும், ஜாம்பவான் பேட்ஸ்மேனுமான ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். பர்மிங்காமில் பாகிஸ்தானுக்கு (Pakistan Cricket Team) எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில், ரூட் 9 பவுண்டரிகளை விளாசி, ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தியுள்ளார்.

ALSO READ: எனக்கு இன்னும் சம்பள பாக்கியை தரவில்லை.. பாகிஸ்தான் முன்னாள் டெஸ்ட் பயிற்சியாளர் பகீர் குற்றச்சாட்டு!

ஜோ ரூட்டின் ஆட்டம் இங்கிலாந்து அணி வெற்றிபெற உதவியது மட்டுமல்லாமல், ஒரு உலக சாதனையையும் படைத்தது. சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை 68 டெஸ்ட் அரைசதங்களுடன் நிறைவு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜோ ரூட் தனது 69வது அரைசதத்தை அடித்தார். இதன்மூலம், 66 அரைசதங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷிவ்நரைன் சந்தர்பால், இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து, மூன்றாவது இடத்திற்குச் சரிந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்

  • ஜோ ரூட் (இங்கிலாந்து) – 69
  • சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 68
  • ஷிவ்நரைன் சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்) – 66
  • ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா) – 63
  • ராகுல் டிராவிட் (இந்தியா) – 63

சச்சினின் மற்றொரு சாதனையை முறியடிப்பாரா ரூட்..?

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சாதனை சச்சின் டெண்டுல்கரிடம் உள்ளது. அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை 200 போட்டிகளில் 329 இன்னிங்ஸ்களில் 15,921 ரன்களுடன் முடித்தார். இந்தப் பட்டியலில் ஜோ ரூட் இரண்டாம் இடத்தில் உள்ளார். இதுவரை, ரூட் 169 டெஸ்ட் போட்டிகளில் 309 இன்னிங்ஸ்களில் 50.45 சராசரியில் 14,278 ரன்கள் எடுத்துள்ளார். இதனால், ரூட் அவரை விட 1,643 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார். அவரால் சச்சினின் சாதனையையும் முறியடிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள்

  • சச்சின் டெண்டுல்கர் – 15921 ரன்கள்
  • ஜோ ரூட் (ஆக்டிவ் வீரர்) – 14278 ரன்கள்
  • ரிக்கி பாண்டிங் – 13378 ரன்கள்
  • ஜாக் காலிஸ் – 13289 ரன்கள்
  • ராகுல் டிராவிட் – 13288 ரன்கள்

ALSO READ: பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பு.. உள்ளூரில் கிரிக்கெட் விளையாட ரிஸ்வானுக்கு தடை..!

2012-ல் டெஸ்ட் அறிமுகம்

ஜோ ரூட் 2012-ல் தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதே சமயம், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2013-ல் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ரூட் அனைத்து வடிவங்களிலும் 169 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ரூட் இதுவரை 309 இன்னிங்ஸ்களில் 69 அரை சதங்கள் மற்றும் 41 சதங்கள் உட்பட 14,278 ரன்கள் எடுத்துள்ளார். மறுபுறம், சச்சின் டெண்டுல்கர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை 51 சதங்களுடன் முடித்தார்.

Follow Us