AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Special Trains Announced for Madurai : உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருகிற செப்டம்பர் 17, 2026 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகைதரவிருக்கின்றனர். இதனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Sep 2026 18:05 PM IST

சென்னை, செப்டம்பர் 13 : உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருகிற செப்டம்பர் 17, 2026 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில் மதுரை மட்டுமல்லாது தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தரவுள்ளனர். இதனையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் வரும் செப்டம்பர் 16, 2026 சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கும், மறுமார்க்கத்தில், செப்டம்பர் 17, 2026 அன்று மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் படி செப்டம்பர் 16, 2026 அன்று மாலை 04.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 04.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இதையும் படிக்க : “முதலீடுகளை ஈர்க்க தான் முதல்வர் லண்டன் சென்றுள்ளாரா?”.. நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

தெற்கு ரயில்வே அறிவிப்பு

 

அதே போல செப்டம்பர் 17, 2026 அன்று பிற்பகல் 03.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு சென்னை சென்ட்ரலைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில்கள் நின்றுச் செல்லும்.

இதையும் படிக்க : “முதலீடுகளை ஈர்ப்பார் என நினைத்தேன், ஆனால்.. வேறுவிதமாக வந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள்”.. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்!!

மானாமதுரை- சென்னை முன்பதிவில்லா மெமு ரயில்

அதே போல வரும் செப்டம்பர் 16, 2026 அன்று காலை 10.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா மெமு ரயில் , இரவு 11.30 மணிக்கு மானாமதுரையைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், செப்டம்பர் 17, 2026 அன்று மதியம் 12 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா மெமு ரயில் இரவு 11.45 மணிக்கு சென்னை தாம்பரத்தைச் சென்றடையும். இந்த மெமு சிறப்பு ரயில்கள், 12 முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.

தென்மாவட்ட பக்தர்களின் தேவையைப் பூர்த்திச் செய்ய ஏதுவாக சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு அதிவிரைவு சிறப்பு ரயிலும் (06157), சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் (06153) இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us