நானியின் தி பாரடைஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகாதா? வைரலாகும் தகவல்
The Paradise Movie Trailer | நடிகர் நானியின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தி பாரடைஸ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் ட்ரெய்லர் குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவருபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் நானி அவ்வபோது மற்ற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் நானியின் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் வெளியாக உள்ள படம் தி பாரடைஸ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த 2024-ம் ஆண்டே தொடங்கியது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த தி பாரடைஸ் படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றது. மேலும் படம் தொடர்பான தகவல்களும் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
இந்த தி பாரடைஸ் படத்தினை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் நானிக்கு ஜோசியாக நடிகை கயாடு லோஹர் நடித்து உள்ளார். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரே ஒரு பாடலுக்கு நடிகர் நானி உடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




நானியின் தி பாரடைஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகாதா?
இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின் படி நடிகர் நானியின் நடிப்பில் உருவாகி வரும் தி பாரடைஸ் படத்தின் படக்குழுவினர், டிரெய்லர் இல்லாமல் திரைப்படத்தை வெளியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் படத்தை வெளியிடுவதற்காக, இறுதிக்கட்ட படப்பிடிப்பு, திருத்தப் பணிகள் மற்றும் பிந்தைய தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… Ravi Mohan: பெருமாளாக ரவி மோகன்.. பிறந்தநாளில் வெளியான தெலுங்கு படத்தின் அறிவிப்பு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
BUZZ – #TheParadise makers are considering releasing the movie WITHOUT A TRAILER. Last-minute shooting, patchwork and post-production are currently happening to release it by September 24th.#Nani’s biggest anticipated film 🔥 pic.twitter.com/DPD2T40xaI
— Movies Singapore (@MoviesSingapore) September 11, 2026
Also Read… 4வது நாளே வைல்டுகார்ட் என்ட்ரியா? பிக் பாஸ் 10ல் நுழைந்த காமம் மேன் நிகழ்ச்சி போட்டியாளர்!