AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் 46 டிஎஸ்பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்.. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!

Tamil Nadu DSPs Transfer : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வரும் 46 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

தமிழகத்தில் 46 டிஎஸ்பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்.. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 12 Sep 2026 15:58 PM IST

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த சுமார் 46 காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால் பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி டி.எஸ்.பி. ஆக இருந்த ஜெகநாதன் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சரக உதவியாளராகவும், ஆவடி குற்ற ஆவண பிரிவின் டி.எஸ்.பி. முத்துராஜா லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஆகவும், சென்னை குற்ற புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக இருந்த சரஸ்வதி சென்னை ஐ. யூ. சி. ஏ. டபுள்யூ. உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வடக்கு டிஎஸ்பி பணியிட மாற்றம்

இதே போல சென்னை வடக்கு தீவிர குற்றப்பிரிவு டிஎஸ்பி தமிழ்வாணன் ஆவடி காவல் ஆணையரத்துக்குட்பட்ட பொன்னேரி சரக உதவி ஆணையராகவும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிஎஸ்பி பெசினா பிவி திருநெல்வேலி குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பி ஆகவும், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் டிஎஸ்பி காயத்ரி மதுரை ஐ.யூ.சி.ஏ. டபிள்யூ. டிஎஸ்பி ஆகவும். தஞ்சாவூர் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் வேதாரண்யம் கடலோர காவல் படை பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: அரசியல் களத்தில் அடுத்த புயல்! மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல் நடத்த தடை? உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு!

திருநெல்வேலி சிறப்பு பிரிவு டிஎஸ்பி

திருநெல்வேலி சிறப்பு பிரிவு டிஎஸ்பி சுதேசன் திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பிரியதர்ஷினி திருநெல்வேலி சிறப்பு பிரிவுக்கும், ஆவடி காவல் ஆணையரகத்தில் புலனாய்வு பிரிவு டிஎஸ்பி மணிவண்ணன் காஞ்சிபுரம் சப் டிவிஷனுக்கும், சென்னை வண்ணாரப்பேட்டை சரக உதவி ஆணையராக இருந்த மகேந்திரன் கிருஷ்ணகிரி உற்ற ஆவண பிரிவு டிஎஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை குற்றப்பிரிவு டிஎஸ்பி மாற்றம்

இதே போல, மதுரை குற்றப்பிரிவு டிஎஸ்பி நிவேதா லட்சுமி மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், மயிலாடுதுறை சப் டிவிஷன் டி.எஸ்.பி. பாலாஜி சென்னை உயர்நீதிமன்ற சரக உதவி ஆணையராகவும், ராமநாதபுரம் சப் டிவிஷன் டிஎஸ்பி சுகுமாரன் பரமக்குடி சப் டிவிஷனுக்கும், திருவண்ணாமலை சப் டிவிஷன் டிஎஸ்பி ராஜா திருப்பூர் நகர கேவிஆர் நகர் சரக உதவி ஆணையராகவும், திண்டுக்கல் ரூரல் சப் டிவிஷன் டிஎஸ்பி சங்கர் திருச்சி மாவட்டம், விஜயபுரம் சப் டிவிஷனுக்கும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி நகர புலனாய்வு பிரிவு உதவி ஆணையர்

திருச்சி நகர புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் பிரிதர் கன்னியாகுமரி குற்றப்பிரிவுக்கும், திருநெல்வேலி நகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் செந்தாமரைக்கண்ணன் லஞ்ச ஒழிப்பு துறைக்கும், ஓசூர் சப் டிவிஷன் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறைக்கும், திருநெல்வேலி ரூரல் சப் டிவிஷன் ரகுபதி ராஜா சங்கரன்கோவில் சப் டிவிஷனுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, 46 டிஎஸ்பிக்கள் பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: என் தலைவரை ( மு.க.ஸ்டாலினை) தொட்டவரை விடமாட்டோம்.. திமுக போராட்டத்தில் மேயர் ஆர். பிரியா ஆவேசம்!

Follow Us