பிக்பாஸில் சாதிகாவிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கும் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் செல்கின்றது. இந்த நிலையில் இன்று இந்த வார கேப்டனான சாதிகாவிடம் விஜய் சேதுபதி எழுப்பும் கேள்விகள் வைரலாகி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து தினமும் ஒளிபரப்பாகி வருகின்றது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார். மொத்தம் 19 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதில் நடிகர் பளாக் பாண்டி உடல் நலக்குறைவு காரணமாக வெளியேறினார். பிறகு 18 போட்டியாளர்கள் மட்டுமே என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது காமென் மேன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணிவன்னன் என்பவர் வைல்கார்ட் போட்டியாளராக உள்ளே வந்தார். நிகழ்ச்சி தொடங்கிய 4 நாட்களிலேயே இவரும் உள்ளே வந்ததால் பெரும் அளவில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் வித்யாசம் தெரியவில்லை. இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பல புது விசங்களை நிகழ்ச்சி குழு ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும் டெமோகிரசி அறை என்ற ஒரு கான்செப்டை உருவாக்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி குழு அந்த கான்செப்டின் அடிப்படையில் மொத்த நிகழ்ச்சியும் செயல்படும்படி கொண்டு செல்கின்றது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இருக்கின்றது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான விஜய் சேதுபதி வருகை இன்று உள்ளது. அதன்படி சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் விஜய் சேதுபதி வந்து வாரம் முழுவதும் நடைப்பெற்ற விசயங்கள் குறித்து பேசுகிறார்.




பிக்பாஸில் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கும் விஜய் சேதுபதி:
இந்த நிலையில் இன்று விஜய் சேதுபதி இந்த வார கேப்டனாக பதவி ஏற்ற சாதிகாவின் கேப்டன்சி குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார். மேலும் சாதிகாவின் கேப்டன்சி குறித்து மற்ற போட்டியாளர்களின் கருத்துகளை கேட்கும் விஜய் சேதுபதி ஏன் சொன்ன மாதிரி கேப்டனாக நடந்துகொள்ள முடியவில்லை எனறும் அதில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பினார். இன்றைய எபிசோடில் அது குறித்து முழுமையாக காட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day6 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/eFbTYvm5k8
— Vijay Television (@vijaytelevision) September 12, 2026
Also Read… டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் பாராட்டைப் பெற்ற டோரதி படம்