AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

15 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு.. சென்னை பறக்கும் ரயில் சேவை மெட்ரோவுடன் இணைப்பு..

Chennai MRTS Integration with Metro Rail: சென்னை பறக்கும் ரயில் சேவையை (MRTS) மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 15 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் சாத்தியமாகியுள்ள இத்திட்டத்தின் மூலம் தெற்கு ரயில்வே தனது சொத்துக்கள் மற்றும் பராமரிப்பு உரிமைகளை மெட்ரோவிடம் ஒப்படைக்கும்.

15 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு.. சென்னை பறக்கும் ரயில் சேவை மெட்ரோவுடன் இணைப்பு..
பறக்கும் ரயில், மெட்ரோ ரயில்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Aug 2026 07:17 AM IST

சென்னை, ஆகஸ்ட் 19: சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதிலும், சென்னை புறநகர் பகுதிகளை மாநகர மையப் பகுதிகளுடன் இணைப்பதிலும் பறக்கும் ரயில் சேவை முக்கியப் பங்கு வகித்து வருகிறது. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வரும் இந்த உயர்மட்ட ரயில் சேவையை, மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க வேண்டும் என்பது கடந்த 15 ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்த மிக முக்கியமான கோரிக்கையாகும். நீண்டகாலமாக இழுபறியில் இருந்த இந்த இணைப்பு திட்டத்திற்கு தற்போது ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: ”கண் முன் வந்த கரூர் சம்பவம்!”.. மாநாட்டில் 3 நிமிடத்தில் உரையை முடித்தது ஏன்? திருமாவளவன் உருக்கமான விளக்கம்!!

பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் பாதை இணைப்பு:

ரயில்வே வாரியத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்புதலைத் தொடர்ந்து, நடைமுறைக்கு வரவுள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின்படி தெற்கு ரயில்வே தன்னிடம் உள்ள பறக்கும் ரயில் தொடர்பான சொத்துக்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அவற்றின் பராமரிப்பு உரிமைகளை முழுமையாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும். இதற்காக சென்னை கடற்கரை மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் பறக்கும் ரயில் பாதையையும் மெட்ரோ ரயில் பாதையையும் இணைப்பதற்கான சிறப்பு உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு வசதிகள் விரைந்து மேற்கொள்ளப்பட உள்ளன.

ஒரே டிக்கெட் முறையில் தடையின்றி பயணம்:

இந்த நிர்வாக மாற்றத்தின் மூலமாக, நீண்டகாலமாகப் போதிய பராமரிப்பின்றி காணப்பட்ட பறக்கும் ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பயணிகள் வசதிகள் மெட்ரோ ரயில் நிலையங்களின் தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும். மேலும், பயணிகளுக்குக் கூடுதல் ரயில் சேவைகள் கிடைப்பதுடன், ஒரே டிக்கெட் முறை அல்லது ஒரே பயண அட்டையை பயன்படுத்தி மெட்ரோ மற்றும் பறக்கும் ரயில்களில் தடையின்றி பயணிக்கும் வாய்ப்பும் உருவாகும். இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது சென்னை மாநகரப் பயணிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த வேலைக்குச் செல்வோர் பெரும் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : நடிகைக்கு சல்யூட் அடித்த முதல்வர் விஜய்.. சகிக்க முடியவில்லை – உதயநிதியை தொடர்ந்து முரசொலியில் விமர்சனம்..

சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த முடிவு:

இணைப்புப் பணிகள் முழுமையடையும் போது, தற்போதுள்ள பறக்கும் ரயில் பாதையில் புதிய குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, ரயில்களின் இயக்க இடைவெளி நேரம் வெகுவாகக் குறைக்கப்படும். மேலும், வேளச்சேரி வரை செயல்பட்டு வரும் பறக்கும் ரயில் பாதையைத் புனித தோமையார் மலை (St. Thomas Mount) வரை இணைக்கும் எஞ்சிய பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு, மெட்ரோவின் இரண்டாம் கட்டப் பாதைகளுடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. இதன் மூலம் பறக்கும் ரயில் நிலையங்களில் தானியங்கி நுழைவு வாயில்கள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், எஸ்கலேட்டர்கள் மற்றும் வணிக வளாக வசதிகள் அமைக்கப்பட்டு, சென்னை மாநகரத்தின் ஒட்டுமொத்தப் பொதுப் போக்குவரத்துத் துறையே சர்வதேசத் தரத்திற்குத் தரம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us