Tamil Nadu Weather Alert: இன்று இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தப் பாதை நிலவுவதாகவும் அதன் காரணமாக செங்கல்பட்டு உட்பட 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 15 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 19 : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 19, 2026 இன்று 3 மாவட்டங்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தப் பாதை நிலவுவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு, கடலூர், வீழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஆகஸ்ட் 19, 2026 இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்யுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : நடிகைக்கு சல்யூட் அடித்த முதல்வர் விஜய்.. சகிக்க முடியவில்லை – உதயநிதியை தொடர்ந்து முரசொலியில் விமர்சனம்..
மேலும் சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி ஆகிய 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 18, 2026
முன்னதாக, ஆகஸ்ட் 20, 2026 நாளை முதல் ஆகஸ்ட் 23, 2026 வரை 4 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வெப்ப நிலையை பொறுத்தவரை வருகிற ஆகஸ்ட் 21, 2026 வரை தமிழகத்தின் உள் பகுதிகளின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திமுக பாதையில் தவெக அரசும் பயணிக்கிறதா? அரசின் இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் – அண்ணாமலை..
தனியார் வானிலை நிபுணரின் அறிவிப்பு
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 19, 2026 இன்றும், நாளையும் பகலில் தெளிவான வானத்துடன் வெப்பமான சூழலும், இரவில் இடியுடன் கூடிய கனமழையும் பதிவாகும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக சேலம், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மாலை அல்லது இரவு நேரத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.