AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

” கண் முன் வந்த கரூர் சம்பவம்!”.. மாநாட்டில் 3 நிமிடத்தில் உரையை முடித்தது ஏன்? திருமாவளவன் உருக்கமான விளக்கம்!!

VCK Ulundurpet Conference: உளுந்தூர்பேட்டை வீசிக மாநாட்டில் உயிரச்சம் ஏற்படும் அளவுக்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், கரூர் சம்பவம் போல் அசம்பாவிதம் ஏதும் நடக்கக் கூடாது என்பதற்காகவே தனது உரையை 3 நிமிடங்களில் முடித்துக் கொண்டதாக தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். பெண்கள், முதியோர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

” கண் முன் வந்த கரூர் சம்பவம்!”.. மாநாட்டில் 3 நிமிடத்தில் உரையை முடித்தது ஏன்? திருமாவளவன் உருக்கமான விளக்கம்!!
திருமாவளவன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Aug 2026 06:29 AM IST

சென்னை, ஆகஸ்ட் 19: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் திரண்டு வந்ததால் மாநாட்டு திடல் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. இந்நிலையில், மாநாட்டின் முக்கிய நிகழ்வாக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மேடை ஏறி உரையாற்றிய போது, தனது பேச்சை நீண்ட நேரம் தொடராமல் வெறும் 3 நிமிடங்களுக்குள்ளாகவே சுருக்கமாக முடித்துக் கொண்டது அரசியல் வட்டாரத்திலும் தொண்டர்களிடையேயும் பெரும் பரபரப்பையும் கேள்விகளையும் எழுப்பியது.

இதையும் படிக்க: நடிகைக்கு சல்யூட் அடித்த முதல்வர் விஜய்.. சகிக்க முடியவில்லை – உதயநிதியை தொடர்ந்து முரசொலியில் விமர்சனம்..

உயிரச்சம் ஏற்படும் அளவுக்கு கூட்ட நெரிசல்:

இதுகுறித்துத் தொல். திருமாவளவன் அளித்த உருக்கமான விளக்கத்தில், உளுந்தூர்பேட்டை மாநாட்டில் உயிரச்சம் ஏற்படும் அளவுக்குக் கடும் கூட்ட நெரிசல் நிலவியதாகத் தெரிவித்தார். மாநாட்டு திடலில் கடல் அலை வீசுவது போலத் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடித்துத் தற்காத்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததை நேரில் கண்டதாக அவர் விவரித்தார். அந்த மரண பயம் மேலோங்கிய சூழலிலும் கூட, லட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள காட்டிய ஆர்வம் தனக்கு மேலும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியதாகக் கூறினார்.

கரூர் சம்பவம் போல் நடந்துவிடக்கூடாது:

மாநாட்டிற்கு வருகை தந்திருந்த வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த அலைமோதும் கூட்ட நெரிசலில் சிக்கி எந்தவித ஆபத்திலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் தான் தீவிரமாக இருந்ததாகத் தெரிவித்தார். கரூர் துயரச் சம்பவம் போல் இங்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற பதற்றமும் கவலையும் மனதிற்குள் மேலோங்கியதால், மாநாட்டு உரையை ஓரிரு நிமிடங்களிலேயே முடித்துக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிக்க: திமுக பாதையில் தவெக அரசும் பயணிக்கிறதா? அரசின் இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் – அண்ணாமலை..

நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை:

இன்னும் சில நிமிடங்கள் தான் உரையைத் தொடர்ந்து பேசியிருந்தால், இந்த நெரிசலின் வீரியம் எந்த அளவுக்குச் சென்றிருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று குறிப்பிட்ட திருமாவளவன், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே தொண்டர்களை உடனடியாகப் பாதுகாப்பாக வீடு திரும்புமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறினார். அந்த அளவுக்குத் தோழர்கள் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடித்துத் தற்காத்துக் கொள்ளும் சூழல் தான் அங்கு நிலவியது. நேரில் பார்த்தவர்கள் மட்டுமே அதன் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
தொண்டர்களின் உயிர்ப் பாதுகாப்பை மட்டுமே முதன்மையாகக் கருதி, கரூர் சம்பவம் போன்ற சோகங்கள் நிகழக் கூடாது என்பதற்காகவே மாநாட்டு உரையை முன்கூட்டியே நிறைவு செய்ததாகத் தெளிவுபடுத்தினார்.

Follow Us