AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs AFG: வந்தவுடன் மீண்டும் காயம்.. ஆப்கானிஸ்தான் தொடரில் விலகும் வருண் சக்கரவர்த்தி!

Varun Chakravarthy injury: ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் முதல் போட்டியில் வருண் சக்கரவர்த்தி அற்புதமாகப் பந்துவீசினார். அதாவது தான் வீசிய 4 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். இந்திய அணியில் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தாலும், காயங்கள் வருணுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றன.

IND vs AFG: வந்தவுடன் மீண்டும் காயம்.. ஆப்கானிஸ்தான் தொடரில் விலகும் வருண் சக்கரவர்த்தி!
வருண் சக்கரவர்த்தி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Sep 2026 23:25 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக (IND vs AFG) நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Asian Games 2026) அவரது பங்கேற்பா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2026 ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட தொடை தசைநார் காயத்திலிருந்து வருண் சக்கரவர்த்தி சமீபத்தில் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: வெஸ்ட் இண்டீஸ் தொடர்தான் கடைசி.. அகர்கரின் எதிர்காலம் முடிந்துவிட்டதா..?

வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டதால் அவர் தொடரிலிருந்து விலகியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும், வருணின் காயம் குறித்து பிசிசி எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. இது ஒரு புதிய காயம் என்றும், இதன் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்றும் கிரிக்கெட் வட்டாரம் கூறியது.

சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி:

v


ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் முதல் போட்டியில் வருண் சக்கரவர்த்தி அற்புதமாகப் பந்துவீசினார். அதாவது தான் வீசிய 4 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். இந்திய அணியில் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தாலும், காயங்கள் வருணுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றன. சமீபத்தில், வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவது குறித்த பிரச்சினை எழுந்துள்ளது. இது இந்திய அணிக்குச் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. வருணுக்குப் பதிலாக எந்த வீரர் அணியில் சேர்க்கப்படுவார் என்பதை விரைவில் பிசிசிஐ அறிவிக்கலாம்.

ALSO READ: சொதப்பும் சஞ்சு.. சூர்யவன்ஷிக்கு வாய்ப்பா..? இந்திய பிளேயிங் லெவன் விவரம்!

வருண் சக்ரவர்த்தியின் சர்வதேச வாழ்க்கை

இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் விளையாடும் வருண் சக்கரவர்த்தி, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் 49 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவர் நான்கு ஒருநாள் இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அவரது சிறந்த பந்துவீச்சு 5/42 ஆகும். மேலும், அவர் 46 டி20 சர்வதேச இன்னிங்ஸ்களில் 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், வருண் சக்கரவர்த்தியின் சிறந்த பந்துவீச்சு 5/17 ஆகும்.

Follow Us