ஆயுத பூஜையை முன்னிட்டு தொலைக்காட்சியில் வெளியாகும் மார்கன் படம்!
Maargan movie : இந்தியாவில் எந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றாலும் வெள்ளித்திரையில் புதுப் படங்கள் வெளியாவது போல சின்னத்திரையில் புதிதாக திரையரங்குகளில் வெளியான படங்களை வெளியிடுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் நாளை ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு மார்கன் படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் என்ற வசனம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானது ஆகும். ஒவ்வொரு விழா கொண்டாடப்படுப்போதும் திரையரங்குகளில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ள நிலையில் தொலைக்காட்சிகளிலும் புதுப் படங்களை தொடர்ந்து ஒளிபரப்புவது வழக்கமாக உள்ளது. அதன்படி ஒவ்வொரு பண்டிகையின் போதும் தொடர்ந்து புதுப் படங்கள் குறித்த நிகழ்ச்சிகளையும், புதுப் படங்களையும், ரியால்ட்டி நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியின் (Actor Vijay Antony) நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியகாவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மார்கன் (Maargan Movie). இந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியிடப்பட்ட நிலையில் ஓடிடியிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்த மார்கன் படத்தில் அவரது அக்காவின் மகன் அஜய் தீஷன் இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. தொடர்ந்து இவர் தற்போது நாயகனாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதனை நடிகர் விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மார்கன் படம்:
அந்த வகையில் நாளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆயுத பூஜை பண்டிகையை கொண்டாட உள்ளனர். இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப தொலைக்காட்சி குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்ப உள்ளனர். இது குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே தற்போது வரவேற்பைப் பெற்று வருகின்றது.




Also Read… விஜயுடன் மோதும் பிரபாஸ்… தி ராஜா சாப் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!