Vijay Hazare Trophy: கடைசி ஓவரில் 6 ரன்கள்.. மெய்டன் ஓவரை வீசி அசத்திய சிஎஸ்கே வீரர்..! குவியும் பாராட்டுகள்!
Ramakrishna Ghosh Maiden Over: மகாராஷ்டிரா சார்பில் கடைசி ஓவரை வீச ராமகிருஷ்ண கோஷ் வந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த ஓவரில் அவர் தொடர்ச்சியாக ஆறு டாட் பந்துகளை வீசினார். அதாவது, 0-0-0-0-0-0-0 என்ற கணக்கில் மெய்டன் ஓவராக வீசினார். இது மகாராஷ்டிராவுக்கு மறக்கமுடியாத 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுத் தந்தது.
விஜய் ஹசாரே டிராபியின் (Vijay Hazare Trophy) எலைட் குரூப் சி-யில் மகாராஷ்டிரா மற்றும் கோவா அணிகளுக்கு இடையேயான போட்டி கடைசி பந்து வரை சென்று அதிர்ச்சியையும், ஆச்சர்த்தையும் தந்தது. இந்த அதிரடியான போட்டியில், கோவாவை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மகாராஷ்டிரா அனைவரையும் ஆச்சர்யத்தில் தள்ளியது. இந்த போட்டியின் வெற்றியின் நாயகன் மகாராஷ்டிரா ஆல்ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) வீரருமான ராமகிருஷ்ண கோஷ், கடைசி ஓவரில் அற்புதமான ஸ்பெல்லை வெளிப்படுத்தி கோவா வெற்றியை தட்டி பறிந்து, மகாராஷ்டிராவுக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
ALSO READ: பிசிசிஐ விதிகளை மீறிய ஹர்திக் பாண்ட்யா.. பிரச்சனையை எதிர்கொள்வாரா..?




ராமகிருஷ்ண கோஷ் மெய்டன் ஓவர்:
🚨 Witness Ramakrishna Ghosh masterclass who bowled a Maiden when Goa needed 6 runs in the last over !!
Overall in this VHT: 7 Matches, 219 Runs at an Avg of 45 & 17 wickets with the ball🔥
He can be that guy CSK missing in the lineup🤞💛pic.twitter.com/eYPp9Ps1oO
— Navneet 🚩 (@MSDian067) January 9, 2026
முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அற்புதமான சதம் அடித்து 134 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது மட்டுமின்றி, விக்கி ஓஸ்ட்வாலும் தனது பங்கிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தார். பதிலுக்கு, கோவா அணி காஷ்யப் பக்காலே மற்றும் ஸ்னேஹல் கவுதன்கர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்ததன் மூலம் வலுவான தொடக்கத்தை அளித்தது. இருப்பினும், மகாராஷ்டிரா அணியின் பந்துவீச்சாளர்கள் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், கோவா தடுமாற தொடங்கியது.
ஒரு கட்டத்தில் கோவா அணி 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, கோவா பேட்ஸ்மேன் லலித் யாதவ் 67 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்திருந்தார். போட்டி இறுதி ஓவர் வரை சென்றது. கோவா அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்தநேரத்தில், கோவாவின் கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.
மகாராஷ்டிரா சார்பில் கடைசி ஓவரை வீச ராமகிருஷ்ண கோஷ் வந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த ஓவரில் அவர் தொடர்ச்சியாக ஆறு டாட் பந்துகளை வீசினார். அதாவது, 0-0-0-0-0-0-0 என்ற கணக்கில் மெய்டன் ஓவராக வீசினார். இது மகாராஷ்டிராவுக்கு மறக்கமுடியாத 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்த ஓவர் மட்டுமின்றி, இந்த போட்டி முழுவதும் ராமகிருஷ்ண கோஷ் 10 ஓவர்களில் 35 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
ALSO READ: அனுபவம் முதல் இளம் படை வரை.. ஐபிஎல் 2026ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அணி விவரம்!
ஐபிஎல் 2026ல் சென்னை அணிக்காக களமிறங்கும் கோஷ்:
ராமகிருஷ்ணா கோஷ் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் 2025 ஏலத்தில் சிஎஸ்கே அவரை ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியது. அந்த சீசனில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஐபிஎல் 2026 க்கு அணி அவர் மீது நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டது. விஜய் ஹசாரே டிராபியில் அவரது செயல்திறன், வாய்ப்பு வழங்கப்பட்டால், ஐபிஎல்லிலும் கோஷ் ஒரு முத்திரையைப் பதிக்க முடியும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.