Hardik Pandya: பிசிசிஐ விதிகளை மீறிய ஹர்திக் பாண்ட்யா.. பிரச்சனையை எதிர்கொள்வாரா..?
Vijay Hazare Trophy: நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டபோது, ஹர்திக் பாண்ட்யா 10 ஓவர்கள் வீசும் அளவுக்கு உடல் தகுதியற்றவர் என்று பிசிசிஐ ட்வீட் செய்தது. இப்படியான நிலைமை இருந்தபோதிலும், விஜய் ஹசாரே டிராபியில் ஹர்திக் பாண்ட்யா தான் விளையாடும் பரோடா அணிக்காக 10 ஓவர்களும் முழுமையாக பந்துவீசினார்.
விஜய் ஹசாரே டிராபியில் (Vijay Hazare Trophy) ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) அற்புதமாக செயல்பட்டு மீண்டும் தனது திறமையை நிரூபித்தார். சண்டிகருக்கு எதிரான போட்டியில் தனது அணியை அபார வெற்றிக்கு அழைத்துச் சென்று ஹர்திக் பாண்ட்யா எதிரணிக்கு தக்க பதிலடி கொடுத்தார். . முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 391 ரன்கள் குவித்தது. இந்த மிகப்பெரிய இலக்கை துரத்திய சண்டிகர் அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 31 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டர்கள் உதவியுடன் 75 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, பிசிசிஐ விதிகளுக்கு எதிரான ஒன்றைச் செய்தார். இது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ALSO READ: இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறுமா? சிக்கலில் பிசிசிஐ!




பிசிசிஐ பேச்சை கேட்காத பாண்ட்யா:
🚨Hardik Pandya Show in VHT.🚨
He scored two consecutive stormy innings in VHT.
133(92)
75(31)Eagerly waiting to see Pandya play again in ODIs for India.😍💪🏻pic.twitter.com/cPVgleVt4N
— CricSachin (@Sachin_Gandhi7) January 9, 2026
சண்டிகருக்கு எதிரான போட்டியில் 75 ரன்கள் எடுத்த பிறகு, ஹர்திக் பாண்ட்யா பந்து வீச வந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் ஓவரில் இருந்து பந்துவீச தொடங்கி, 10 ஓவர்களும் முழுமையாக வீசினார். தனது பந்து வீச்சில், பாண்ட்யா 10 ஓவர்களில் 66 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பாண்ட்யாவுக்கு பிசிசிஐ பந்து வீச அனுமதி வழங்கப்படவில்லை.
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டபோது, ஹர்திக் பாண்ட்யா 10 ஓவர்கள் வீசும் அளவுக்கு உடல் தகுதியற்றவர் என்று பிசிசிஐ ட்வீட் செய்தது. இப்படியான நிலைமை இருந்தபோதிலும், விஜய் ஹசாரே டிராபியில் ஹர்திக் பாண்ட்யா தான் விளையாடும் பரோடா அணிக்காக 10 ஓவர்களும் முழுமையாக பந்துவீசினார். டி20 உலகக் கோப்பையிலும் ஹர்திக் பாண்ட்யா முழுமையாக பந்துவீசுவாரா என்பதும் தெரியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில்தான் விஜய் ஹசாரே டிராபியில் 10 ஓவர்கள் முழுவதும் வீசினார். இதற்காக, ஹர்திக் பாண்ட்யா பிசிசிஐயிடம் இருந்து சில கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், சண்டிகருக்கு எதிரான போட்டிக்கு முன்பு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இதற்கு அனுமதி பெற்றிருக்கலாம்.
ALSO READ: இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! திலக் வர்மா திடீர் அறுவை சிகிச்சை.. உலகக் கோப்பையில் விளையாடுவாரா?
ஹர்திக் பாண்டியாவின் அற்புதமான ஆட்டம்:
2025-26 விஜய் ஹசாரே டிராபியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டார். சண்டிகருக்கு எதிராக 75 ரன்கள் எடுத்ததோடு மட்டுமல்லாமல், விதர்பாவுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டு, ஹர்திக் பாண்ட்யா 133 ரன்கள் எடுத்தார். கடந்த இரண்டு போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா மொத்தமாக 20 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா இப்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவார்.