IND vs SL: நிவாரணத்திற்காக கிரிக்கெட் போட்டி.. இலங்கையின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ! காரணம் என்ன?
Sri Lanka Cricket Board: டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக 2026 டிசம்பர் மாதம் இந்தியாவுடன் 2 டி20 தொண்டு போட்டிகளை விளையாட இலங்கை கிரிக்கெட் முன்மொழிந்தது. இருப்பினும், சரியான நேரத்தில் வணிக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாததால், பிசிசிஐ இந்த திட்டத்தை ஏற்கவில்லை.
ஐபிஎல் 2026 (IPL 2026) இல் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வங்காளதேச கிரிக்கெட் வாரியம், தங்கள் டி20 உலகக் கோப்பை லீக் போட்டிகளை இந்தியாவிற்கு பதிலாக இலங்கைக்கு மாற்ற விளையாட்டு அமைச்சகத்திடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றது. இந்தநிலையில், இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டப்படி தொடரும் என்றாலும், இலங்கையின் நிவாரணம் மற்றும் மறுக்கட்டமைப்பு முயற்சிகளுக்கான உடன்பாடு எட்டப்படவில்லை. நிவாரணம் மற்றும் தொண்டு போட்டிகளுக்காக இலங்கை கிரிக்கெட் முறையீடு செய்த போதிலும், 2026 ஆகஸ்ட் மாதத்தில் முன்மொழியப்பட்ட இருதரப்பு தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்றாலும், வணிக காரணங்களுக்கான பிசிசிஐ (BCCI) இந்த திட்டத்தை அங்கீகரிக்கவில்லை.
ஆகஸ்ட் மாதம் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு செல்லும் இந்திய அணி:
2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் தலைவர் ஷம்மி சில்வா தெளிவுபடுத்தினார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் 2 டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்த தொடரில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.




டிட்வா புயல் நிவாரணம்:
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக 2026 டிசம்பர் மாதம் இந்தியாவுடன் 2 டி20 தொண்டு போட்டிகளை விளையாட இலங்கை கிரிக்கெட் முன்மொழிந்தது. இருப்பினும், சரியான நேரத்தில் வணிக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாததால், பிசிசிஐ இந்த திட்டத்தை ஏற்கவில்லை. இந்த பேரழிவு இலங்கைக்கு 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் சேதத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி, 600க்கு மேற்பட்டவர்களின் உயிரையும் வாங்கியது.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்:
இலங்கையில் நிவாரண பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்த வாரம் தம்புல்லாவில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் அனைத்து வருமானமும் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ALSO READ: பிசிசிஐக்கு அதிர்ச்சி! வங்கதேசத்தின் கோரிக்கையை ஏற்ற ஐசிசி! போட்டி இடம் மாற்றமா?
பிசிசிஐ தலைவர் என்ன சொன்னார்?
ஐபிஎல்லில் இருந்து முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வங்கதேச அணி இந்தியா வருவது குறித்து கேள்விகள் எழுந்தன. இதற்கிடையில், பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் ஐஏஎன்எஸ்ஸிடம், “இந்த முடிவு ஐபிஎல்லுக்கு மட்டுமே பொருந்தும். உலகக் கோப்பை குறித்து நாங்கள் இன்னும் விவாதிக்கவில்லை. விவாதத்திற்குப் பிறகு விவரங்களைப் பகிர்ந்து கொள்வோம்” என்று கூறினார்.