சிலம்பரசன் பட ஷூட்டிங் எப்போது? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!
Vetrimaaran And Silambarasan Movie Shooting Update : தென்னிந்திய சினிமாவில் தனது சிறுவயது முதல் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருப்பவர் சிலம்பரசன். இவர் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் , சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய வெற்றிமாறன், இப்படத்தின் ஷூட்டிங் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

கோலிவுட் சினிமாவில் தனது சிறுவயது முதல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் உருவான இப்படமானது, கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. வெளியீட்டிற்கு முன்னே இப்படத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருந்த நிலையில், படம் வெளியாகி ரசிகர்களிடையே அந்த ஆர்வத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். இந்த படத்தில் கமல் ஹாசன் (Kamal Haasan) முன்னணி வேடத்தில் நடிக்க, அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்திருந்தார். இதை அடுத்தாக தற்போது, இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார் சிலம்பரசன்.
இந்த படத்திற்கு முன், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் STR 49 படத்தில் நடிக்கவிருந்தார். சில காரணங்களால் இப்படத்தின் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெற்றிமாறனுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், இந்த புதிய படத்தின் ஷூட்டிங் குறித்து அப்டேட் ஒன்றைக் கூறியுள்ளார்.




இதையும் படிங்க : மகேஷ் பாபு பிறந்த நாளில் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த இயக்குநர் ராஜமௌலி
சிலம்பரசன் புதிய படம் குடித்து வெற்றிமாறன் சொன்ன அப்டேட் :
அந்த நேர்காணலில் பேசிய வெற்றிமாறனிடம், பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. பின் சிலம்பரசனுடன் நீங்கள் இணையும் ஷூடிங் எப்போது என்று கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த வெற்றிமாறன், ” சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பமாகிவிடும், மேலும் அறிவிப்பு வீடியோவும் வெகு விரைவில் வெளியாகும் “என அப்டேட் கொடுத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் அறிவிப்பு வீடியோ இந்த 2025 ஆகஸ்ட் மாதத்தின் இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் 2025, செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஜன நாயகன் படத்தில் விஜயுடன் நடித்த அனுபவம் – நடிகர் பாபி தியோல்
சிலம்பரசனின் ரீசென்ட் போட்டோஷூட் பதிவு :
View this post on Instagram
சிலம்பரசன் வெற்றிமாறனின் படத்தின் கதைக்களம் :
இந்த புதிய திரைப்படத்தில் கதைக்களம், தனுஷின் வட சென்னை திரைப்படத்தின் கதையை தொடர்புப்படுத்தி உருவாகவுள்ளதாம். வட சென்னை படத்தில் உள்ள ராஜன் கதாபாத்திரத்தின் கதையை அடிப்படியாகக் கொண்டு, இந்த புதிய திரைப்படமானது உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிலம்பரசன் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் சிவராஜ்குமார் மற்றும் கே. மணிகண்டன் போன்ற நடிகர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் இப்படத்தில் ஒரு பாகமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.