Marshal: கார்த்தியின் மார்ஷல் படத்தின் கதை இதுவா? வைரலாகும் தகவல்!
Marshal Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்தி. இவரின் முன்னணி நடிப்பில் தற்போது மார்ஷல் படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இப்படத்தின் கதைக்களம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 25க்கு மேற்பட்ட படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், இவரின் நடிப்பில் வெளியிட்டிருக்கு கிட்டத்தட்ட 2 படங்கள் தயாராகியுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து, கார்த்தி நடித்துவரும் புதிய திரைப்படம்தான் மார்ஷல் (Marshal). இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டநிலையில், இப்படத்தின் ஷூட்டிக் கடந்த 2025 ஜுன் மாதம் முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் மற்றும் நடிகருமான தமிழ் (Tamizh) இயக்கிவருகிறார்.
இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) நடித்து வருகிறார். மேலும் ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இந்த படத்திற்கு இசையமைத்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தற்போது இப்படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க : தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.. ரேஸ் களத்தில் அஜித் பேச்சு!
கார்த்தியின் மார்ஷல் படத்தின் கதைக்களம்
நடிகர் கார்த்தியின் இந்த மார்ஷல் படத்தி இயக்குநர் தமிழ் இயக்கும் நிலையில், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு இயக்கிவருவதாக கூறப்படுகிறது. இந்த மார்ஷல் படமானது கடந்த 1960ம் ஆண்டுகளில் நடைபெற்ற கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாகிவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? தள்ளிபோகிறதா பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட ரிலீஸ்.. காரணம் தெரியுமா?
இப்படத்தின் ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் மிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறதாம். இந்த படமானது கடற்கரை மக்கள் சார்ந்த மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மார்ஷல் திரைப்படம் குறித்து நடிகர் கார்த்தி வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Dear Friends,
Taking a new step forward with all your love and blessings!! #Marshal #மார்ஷல் begins from today!! pic.twitter.com/KzxDxRpYRa
— Karthi (@Karthi_Offl) July 10, 2025
கார்த்தியின் படங்கள் :
நடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக மெய்யழகன் படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து சர்தார் 2 மற்றும் வா வாத்தயார் என இரு படங்களில் கார்த்தி நடித்து வந்தார். இந்த இரு படங்களும் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் இருந்து வருகிறது. இதில் வா வாத்தியார் என்ற படமானது வரும் 2025 டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. மேலும் சர்தார் 2 படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகவும் என வட்டாரங்கள் கூறுகிறது.