Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மீண்டும் மீண்டுமா? தள்ளிபோகிறதா பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட ரிலீஸ்.. காரணம் தெரியுமா?

Love Insurance Kompany Movie: தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக கலக்கிவருபவர் பிரதீப் ரங்கதான். இவரின் நடிப்பில் 3வது திரைப்படமாக உருவாகியிருப்பது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கியிருக்கும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிபோகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அதன் காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

மீண்டும் மீண்டுமா? தள்ளிபோகிறதா பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட ரிலீஸ்.. காரணம் தெரியுமா?
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Sep 2025 08:30 AM IST

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் டிராகன் (Dragon). இந்த படமானது கடந்த 2025 பிப்ரவரி இறுதியில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படமானது எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தொடர்ந்து, படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார். ரவி மோகனின் (Ravi Mohan) நடிப்பில் வெளியான கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் பிரதீப் ரங்கநாதன்தான். இந்த படத்தை அடுத்ததாக தனது இயக்கத்திலே லவ் டுடே என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே பிரபலமான இவர், தற்போது வரையிலும் ஹீரோவாகவே படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் 3வது உருவாகிவரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany).

இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இந்த படமானது தயாராகியுள்ளது. இப்படமானது இந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் படம் வெளியாகவும் என படக்குழு அறிவித்த நிலையில், சில காரணங்களால் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதாம். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க : கவினின் மாஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் :

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகிவரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் அறிவியல் புனைகதைகள் சார்ந்த படமாக உருவாகியுள்ளது. காதல், எமோஷன் மற்றும் என்டேர்டைனர் போன்ற கதையாகத்தில் உருவாகியுள்ளது. இப்படமானது ஆரம்பத்தில் கடந்த 2025 செப்டம்பர் 18ம் தேதியில் வெளியாகவும் என படக்குழு அறிவித்தது.

இதையும் படிங்க : மண்வாசம் வீசும் கிராமத்து கதையில்.. தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் டிக்கெட் புக்கிங் தொடக்கம்!

பின் சில காரணங்களால் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. பின் மீண்டும் வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகவும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த தேதியில்தான் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படமும் வெளியாகிறது. இந்நிலையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படாத காரணத்தால், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை பெற படக்குழு சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் கேட்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகத்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தள்ளிபோகிறதாம்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் பற்றி பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட பதிவு :

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் எப்போதுதான் வெளியாகும் :

எஸ்.ஜே. சூர்யா, பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, கௌரி ஜி கிஷன் மற்றும் சீமான் போன்ற நடிகர்கள் இந்த் படத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025 டிசம்பர் மாதத்தில் வெளியாகவும் என கூறப்படுகிறது. அதுவும் இல்லையென்றால் 2026ம் ஆண்டு பிப்ரவரில் வெளியாகவும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.