
Tamil New Year
தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். இது புதிய தொடக்கம், பசுமை மற்றும் நலனை வரவேற்கும் நாளாகும். அன்றைய தினம் அறுசுவை உணவுகள் — மாங்காய் பச்சடி, வேப்பம்பூ, பாயாசம், வடை உள்ளிட்டவை முக்கிய இடம் பெறுகின்றன. வாழை இலையில் பரிமாறப்படும் சாம்பார், கூட்டு, மோர் மிளகாய், பச்சடி உள்ளிட்டவை பாரம்பரிய உணவுகளாகும். கனி காணுதல், கோயிலுக்கு செல்லல், புத்தாடைகள் அணிதல் ஆகியவை வழக்கமாக நடைபெறும். கல் உப்பை வாங்குவது நல்ல முறையாக கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யும் நல்ல செயல்கள், ஆண்டு முழுவதும் நன்மை தரும் என நம்பப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு
Tamil New Year Celebration: 2025 ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் பஞ்சாங்க வாசிப்பு நடைபெற்றது. பிள்ளையார்பட்டி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கோயில்களில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக அன்னதானம், மருத்துவம் உள்ளிட்ட சிறப்புவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
- Sivasankari Bose
- Updated on: Apr 14, 2025
- 09:26 am
Tamil New Year 2025: வெற்றி உங்கள் வசமாகும்.. மகர ராசிக்கான புத்தாண்டு பலன்கள்!
2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு மகர ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆண்டாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருந்தாலும், தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 15, 2025
- 11:54 am
Tamil New Year 2025: சாதகமான காலம்.. தனுசு ராசிக்கான புத்தாண்டு பலன்கள்!
2025 விசுவாசு வருடம் தனுசு ராசிக்காரர்களுக்கு 11ம் இடத்தில் பிறப்பதால், விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சொந்தத் தொழிலில் லாபம், சொத்து பிரச்சினைகள் தீரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணம், வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆனால், வாகனப் பயணத்தில் கவனம் தேவை. கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 15, 2025
- 11:54 am
Tamil New Year 2025: சாதகமாகவே அமையும் விசுவாவசு புத்தாண்டு.. மீன ராசிக்கான பலன்கள்!
2025 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு மீன ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக மிகவும் சிறப்பானதாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 15, 2025
- 11:54 am
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. ஈஸியா செய்யலாம் மாங்கா பச்சடி!
Tamil New Year Celebrations: தமிழ் புத்தாண்டன்று சமைக்கப்படும் மாங்காய் பச்சடி, வாழ்க்கையின் ஆறு சுவைகளையும் பிரதிபலிக்கும் தத்துவ உணவாகும். இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய சுவைகள் வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களை குறிக்கின்றன. இந்த பச்சடி, வாழ்வை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கான ஞாபகமாகும்.
- Sivasankari Bose
- Updated on: Apr 14, 2025
- 09:27 am
தமிழ் புத்தாண்டுக்கு என்ன சமைக்கலாம்…? மதிய உணவுப்பட்டியல் இதோ..!
Tamil New Year: தமிழர் மரபு, ஆன்மீகம் மற்றும் குடும்ப ஒற்றுமையுடன் இணைந்த ஒரு முக்கியமான பண்டிகையாக தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது சூரியன் மேஷ ராசிக்கு நுழையும் நாளாகும், இதுவே தமிழ் வருடத்தின் தொடக்கமாகவும், விவசாய காலத்தின் ஆரம்பமாகவும் கருதப்படுகிறது. தமிழ் புத்தாண்டுக்கு என்ன சமைக்கலாம்... மதிய உணவுப்பட்டியல் இதோ..!
- Sivasankari Bose
- Updated on: Apr 14, 2025
- 09:27 am