Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Harish Kalyan: எனது கேரியரில் நான் பண்ண பெரிய பட்ஜெட் படம் டீசல் தான் – ஓபனாக பேசிய ஹரிஷ் கல்யாண்!

Harish Kalyan About Diesel Movie: தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஹரிஷ் கல்யாண். இவரின் முன்னணி நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ஹிட்டாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கடை திறப்புவிழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர் டீசல் திரைப்படம் குறித்து ஓபனாக பேசியுள்ளார். அது பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Harish Kalyan: எனது கேரியரில் நான் பண்ண பெரிய பட்ஜெட் படம் டீசல் தான் – ஓபனாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
ஹரிஷ் கல்யாண மற்றும் அதுல்யா ரவி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Oct 2025 23:30 PM IST

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்து வருபவர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan). கடந்த 2010ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி (Sindhu Samaveli) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து, தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பல்வேறு பாராட்டுகளை பெற்ற திரைப்படம்தான் லப்பர் பந்து (Lubber Pandhu). இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான இப்படமானது, கிரிக்கெட் மற்றும் காதல் தொடர்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக 2025ம் ஆண்டில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் டீசல் (Diesel).

இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டநிலையில், 3 வருடங்களுக்கு பின் இந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் கடை திறப்புவிழா ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இவர், டீசல் திரைப்படம் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க : கார் ரேஸ் போட்டிகளில் அஜித் குமார் தீவிரம் – தள்ளிபோகிறதா ‘AK64’ பட ஷூட்டிங்?

டீசல் திரைப்படம் பற்றி வெளிப்படையாக பேசிய ஹரிஷ் கல்யாண் :

அந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ் கல்யாண், ” தீபாவளி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது சினிமாதான். தீபாவளியன்று நிச்சயமாக எதாவது படத்திற்கு சென்றுவிடுவேன். அவ்வாறு ஒரு ரசிகனாக படங்களை பார்த்து, தற்போது எனது படம் தீபாவளிக்கு வெளியாகிறது எனக்கு மிகவும் ஸ்பெஷல்தான். மேலும் ரொம்ப நாட்களுக்கு பின் எனது டீசல் திரைப்படமானது தீபாவளிக்கு வெளியாகிறது.

இதையும் படிங்க : ஹரிஷ் கல்யானின் டீசல்… இயக்குநர் வெற்றிமாறன் செய்த விஷயம்!

எனது கேரியரில் நான் நடித்த அதிக பட்ஜெட் படமும் இதுதான். மேலும் முதல் தடவையாக ஒரு ஆக்ஷ்ன் படத்தில் நடித்திருக்கிறேன். அதனால் டீசல் திரைப்படம் தீபாவளிக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்படத்தின் கூடவே பைசன் மற்றும் டியூட் திரைப்படமும் வெளியாகிறது. எல்லா படத்திற்கு ஆதரவு கொடுங்க . நிச்சயமாக தியேட்டரில் சென்று பாருங்கள். உங்க ஆதரவு எப்போதும் எங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

டீசல் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட அப்டேட்

இந்த டீசல் படத்தை இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கியிருக்கும் நிலையில், வட சென்னை பகுதிகளை தொடர்புபடுத்திய படமாக உருவாகியுள்ளது. இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி இணைந்து நடித்துள்ளார். இந்த படம் வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகவும் நிலையில், படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.