Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Hot Water Bath: இரவில் சூடான குளியல் சுகம் மட்டுமல்ல! உடலுக்கு இவ்வளவு நன்மையை தருமா..?

Lukewarm Water Bath at Night: நீங்கள் நன்றாக ஓய்வெடுக்க விரும்பினால், இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இந்தப் பழக்கம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. மிகவும் சூடான நீரில் குளிப்பதால் சருமம் கரடுமுரடானது, வறண்டது மற்றும் மந்தமாகிவிடும். எனவே கவனமாக செயல்படுவது முக்கியம்.

Hot Water Bath: இரவில் சூடான குளியல் சுகம் மட்டுமல்ல! உடலுக்கு இவ்வளவு நன்மையை தருமா..?
இரவு குளியல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Oct 2025 18:35 PM IST

தினமும் சிலர் என்ன ஆனாலும் இரவில் குளித்துவிட்டுதான் (Bathing) தூங்க செல்வார்கள். இப்படி உங்களுக்கு பழக்கம் இருந்தால் முடிந்தவரை குளிர்ச்சியான நேரத்தில் குளிக்காமல் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள். இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது எப்போதும் நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். உங்கள் உடலில் ஏற்பட்ட அசதி மற்றும் சோர்வை (Fatigue) நீக்கி புத்துணர்ச்சியை தரும். அதன்படி, இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உங்கள் உடலை புத்துணர்ச்சியுடனும் சுத்தமாகவும் உணர வைக்கும். உங்கள் உடலின் சோர்வு ஒரு நொடியில் நீங்கும்.

இரவில் குளிக்கும்போது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவது ஏன் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது?

ஒரு நாள் கடின உழைப்புக்குப் பிறகு, உடல் மிகவும் சோர்வாக இருக்கும். பகல் நேர வேலை காரணமாக மன அழுத்தத்தின் அளவும் அதிகரிக்கிறது. வீடு திரும்பிய பிறகு இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கும்.
இப்போதெல்லாம், கிட்டத்தட்ட அனைவரும் வேலைக்கு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். நீண்ட நேரம் கணினியில் உட்கார்ந்து வேலை செய்வது கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தும். இது சில நேரங்களில் தலைவலியையும் ஏற்படுத்தும். அப்படியானால், அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால் வலியிலிருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும்.

ALSO READ: நாளுக்கு நாள் முடி உதிர்தல் அதிகரிக்கிறதா..? தடுக்க உதவும் 2 எளிய குறிப்புகள்!

இரவில் குளிர்ந்த நீரில் குளிப்பதை விட வெந்நீரில் குளித்தால், உங்கள் உடல் மிகவும் சுறுசுறுப்பு, புத்துணர்ச்சியை தந்து சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும். இதனால், நீங்கள் அடுத்த வேலையை செய்ய சோம்பேறித்தனம் இன்றி செயல்படுவீர்கள். வெந்நீராக இருந்தாலுமே தண்ணீர் அதிக சூடாகாமல் கவனமாக இருங்கள். தண்ணீர் அதிக சூடாக இருக்கும்போது முடி மற்றும் சருமத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். எனவே, வெதுவெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் நன்றாக ஓய்வெடுக்க விரும்பினால், இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இந்தப் பழக்கம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. மிகவும் சூடான நீரில் குளிப்பதால் சருமம் கரடுமுரடானது, வறண்டது மற்றும் மந்தமாகிவிடும். எனவே கவனமாக செயல்படுவது முக்கியம். மேலும், முடியை மிகவும் சேதப்படுத்துகிறது. முடியின் பளபளப்பு குறைகிறது. முடியின் வேர்கள் பலவீனமடையக்கூடும். உச்சந்தலையிலும் பிரச்சினைகள் ஏற்படலாம். இதன் விளைவாக, முடி உதிர்தல் பிரச்சனையும் அதிகரிக்கும்.

ALSO READ: பளபளப்பான சருமம் வேண்டுமா..? வைட்டமின் ஈ வழங்கும் 5 காய்கறி உணவுகள்..!

இரவு நேரத்தில் ஏன் குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது..?

இரவில் குளிர்ந்த நீரில் குளித்தால் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சனையாக சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையை உண்டாக்கும். குறிப்பாக எளிதில் சளி பிடிக்கும் தன்மை கொண்டவர்கள், இரவில் குளிக்கும்போது குளிர்ந்த நீரைப் பயன்படுத்தவே கூடாது. இரவில் குளித்த பிறகு, உங்கள் தலைமுடி நன்றாக உலர வைக்கும் வரை நேரடியாக ஃபேன் கீழ் அல்லது ஏசி அறையில் இருக்கக்கூடாது. இதுவும் விரைவில் சளி பிடிக்க வழிவகுக்கும். சளி பிடித்தால் தும்மல் மற்றும் இருமல் பிரச்சனையும் உண்டாகும்.