Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bathing Daily: தினமும் குளிக்க வேண்டியது அவசியமா? யார் தினமும் குளிக்க வேண்டும்..?

Necessary to Bathe Every Day: நீங்கள் குளிர்ந்த இடத்தில் வசிக்கிறீர்கள் என்றால், சூழல் வறண்டு, உங்கள் சருமம் அதிகமாக வறண்டிருந்தால், வெந்நீர் மற்றும் சோப்புடன் தினமும் குளிப்பது உங்கள் சருமத்தை மேலும் வறண்டு, அரிப்பு ஏற்படுத்தி, சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Bathing Daily: தினமும் குளிக்க வேண்டியது அவசியமா? யார் தினமும் குளிக்க வேண்டும்..?
குளியல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Oct 2025 15:56 PM IST

எவ்வளவு முக்கியமான பணியாக இருந்தாலும், சிலருக்கு அன்றைய நாளில் உடலில் தண்ணீர் ஊற்றவில்லை என்றால் தூக்கமே வராது. ஒரு காலத்தில் நம் பெரியவர்கள் தினமும் குளிக்காமல் (Bathing) உணவு சாப்பிட மாட்டார்கள். நாமும் சிறுவயதில் குறிப்பிட்ட வயதை எட்டியதும் ​​தினமும் குளிக்கும் பழக்கத்தை கொண்டிருப்போம். இருப்பினும், உண்மையில் தினமும் குளிப்பது அவசியமா என்று கேள்வி எழுப்புகின்றனர். ஒருவருக்கு தோல் பிரச்சனை (Skin Problem) அல்லது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறினால் தினமும் குளிக்கலாம். அப்படி இல்லையெனில், ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்காமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா போன்ற மிகவும் வெப்பமாக இருக்கும் நாட்டில், காற்றின் மூலம் வியர்வை, தூசி மற்றும் மாசு அளவு ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும், இதன் காரணமாக, தினமும் குளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. மேலும், ஜிம்மிற்கு செல்பவர்கள், தினமும் வாக்கிங் செல்பவர்கள், எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள், வெளியே வேலைக்கு சென்று வருபவர்கள் தினமும் குளிப்பது நல்லது.

குளிர்ந்த இடத்தில் உள்ளவர்கள் தினமும் குளிக்கலாமா..?

நீங்கள் குளிர்ந்த இடத்தில் வசிக்கிறீர்கள் என்றால், சூழல் வறண்டு, உங்கள் சருமம் அதிகமாக வறண்டிருந்தால், வெந்நீர் மற்றும் சோப்புடன் தினமும் குளிப்பது உங்கள் சருமத்தை மேலும் வறண்டு, அரிப்பு ஏற்படுத்தி, சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். தோல் மருத்துவர்களின் கூற்றுப்படி, உங்களுக்கு வறண்ட அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், நீங்கள் ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குளிக்க வேண்டும், அதுவும் சோப்பு போட்டு தேய்க்காமல், உங்கள் உடலை கைகளை கொண்டு அழுத்தி தண்ணீரில் கழுவ வேண்டும்.

ALSO READ: தினமும் மவுத்வாஷ் பயன்படுத்துகிறீர்களா..? இது பற்களுக்கு பிரச்சனையை தருமா?

பெரியவர்கள் தினமும் சோப்பு போட்டு குளிக்காமல் இருக்கலாம். இது சருமத்தை இன்னும் அதிகமாக உலர்த்தும். அதற்கு பதிலாக, அதிகமாக வியர்வை சுரக்கும் உடல் பாகங்களை நன்கு சுத்தம் செய்வது நல்லது. நீங்கள் தினமும் குளிக்கவில்லை என்றால், உங்கள் முகத்தை நன்கு கழுவுவது, உங்கள் அக்குள்களை சுத்தமாக வைத்திருப்பது மற்றும் உங்கள் பிறப்புறுப்புகள் மற்றும் கால்களை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். உங்கள் உடலில் அதிக சூடான நீரை ஊற்ற வேண்டாம். எப்போதும், வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். குளித்த பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.

ALSO READ: 4 கிராம்பு போதும்! தலைமுடியில் இருந்து தலைமுடி காணாமல் போகும்..!

பொதுவாக, சருமத்தில் எண்ணெய்ப் படலம் இருக்கும். அதனுடன் நல்ல பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளும் இருக்கும். தினமும் சோப்பு போட்டு குளித்தால் அல்லது வெந்நீரில் குளித்தால், அது நீக்கப்படும். இதன் விளைவாக, சருமம் வறண்டு, அரிப்பு ஏற்படும். சருமம் விரிசல் அடையும். அந்த அடுக்கு இல்லாமல், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் சருமத்தில் குடியேறி, தொற்று மற்றும் ஒவ்வாமை அபாயத்தை அதிகரிக்கும். எனவே, குளிர் மற்றும் மழைக்காலமாக இருந்தால் வாரத்திற்கு 4 முறையும், கோடை காலமாக இருந்தால் தினமும் குளிப்பது முக்கியம். அதேநேரத்தில், உங்களுக்கு அதிகமாக வியர்த்தாலோ அல்லது கசகசவென இருந்தாலோ உடனடியாக குளிப்பது உங்களுக்கு புத்துணர்ச்சியை தரும்.