Glowing Skin: பளபளப்பான சருமம் வேண்டுமா..? வைட்டமின் ஈ வழங்கும் 5 காய்கறி உணவுகள்..!
How to Get Glowing Skin: நமது உணவில் உள்ள வைட்டமின் ஈ ஒரு சிறியளவில் கிடைத்தாலும், இது சரும பராமரிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது உங்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாத்து மென்மையாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்கிறது. இதனுடன் வயதான அறிகுறிகளை மெதுவாக்குகிறது.

பளபளப்பான சருமம் (Glowing Skin) பெறுவதற்கு பலரும் ஆன்லைன் மற்றும் கடைகளில் உயர்தர கிரீம்கள் அல்லது சீரம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஒரு சிலருக்கு இது மட்டும் பலனை தராது. பளபளப்பான சருமம் பெற ஒருவருக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவு முறை கண்டிப்பாக தேவை. நமது உணவில் உள்ள வைட்டமின் ஈ ஒரு சிறியளவில் கிடைத்தாலும், இது சரும பராமரிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது உங்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாத்து மென்மையாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்கிறது. இதனுடன் வயதான அறிகுறிகளை மெதுவாக்குகிறது. சிறந்த விஷயம் என்னவென்றால், வைட்டமின் ஈ- க்கு (Vitamin E) கூடுதல் சப்ளிமெண்ட்ஸ் எதுவும் எடுக்கத் தேவையில்லை, அதற்கு பதிலாக சில சைவ உணவுகள் உங்கள் சருமத்திற்கு சிறந்த பலனை தரும். அதன்படி, உங்கள் சருமத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் 5 காய்கறிகள் மற்றும் கொட்டைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
சூரியகாந்தி விதைகள்:
சூரியகாந்தி விதைகள் சிறியது என்றாலும் இதில், அதிகளவில் வைட்டமின் ஈ நிறைந்தவை. 2 ஸ்பூன் சூரியகாந்தி விதைகள் உங்கள் தினசரி வைட்டமின் ஈ தேவைகளில் பாதியை பூர்த்தி செய்யும். இவை மெக்னீசியம் மற்றும் செலினியத்தையும் வழங்குகின்றன. இது முடி மற்றும் நகங்களை வலுப்படுத்துகிறது.
ALSO READ: வாழைப்பழத்தில் ஹேர் மாஸ்க்.. தலை முடிக்கு வலு சேர்க்கும் அற்புதம்!




பாதாம்:
ட்ரை ப்ரூட்ஸான பாதாம் வைட்டமின் ஈ நிறைந்த மூலமாகும். சுமார் 20 பாதாம் பருப்புகள் உங்கள் தினசரி தேவையான வைட்டமின் ஈல் பாதியை வழங்குகின்றன. மேலும், இவற்றின் ஆரோக்கியமான கொழுப்புகள் உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கின்றன. இவற்றை தொடர்ந்து உட்கொள்வது சில வாரங்களுக்குள் உங்கள் சருமம் பளபளப்பாக இருப்பதைக் காண உதவும்.
அவகேடோ:
ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த அவகேடோ உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். அரை அவகேடோ உங்கள் தினசரி வைட்டமின் ஈ தேவைகளில் 15% வழங்குகிறது.
வேர்க்கடலை :
வேர்க்கடலை வைட்டமின் ஈ மற்றும் புரதத்தை வழங்குகிறது. இது உங்கள் சருமத்தை சரிசெய்ய உதவுகிறது. வேர்க்கடலையை தினமும் எடுத்து கொள்வதன்மூலம் உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவும் வைட்டமின் ஈயை வழங்குகிறது. இது விரைவில் உங்களுக்கு நல்ல பலனை தரும்.
ALSO READ: உதடுகளை சுற்றி கருமை நிற வளையங்களா..? இதை செய்தால் போகும்..!
பசலைக் கீரை:
பசலைக் கீரை அதன் இரும்புச் சத்துக்குப் பெயர் பெற்றது. ஆனால் இதன் வைட்டமின் ஈ உங்களுக்கு பளபளப்பான சருமத்தையும் தர உதவுகிறது. ஒரு கப் சமைத்த பசலைக் கீரை தினசரி வைட்டமின் ஈயை 20 சதவீதம் வழங்கி, உங்கள் சருமத்தை பளபளக்க உதவுகிறது.