Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Genie Movie: கல்யாணி பிரியதர்ஷன் – கீர்த்தி ஷெட்டியின் நடனத்தில்… ரவி மோகனின் ‘ஜீனி’ பட முதல் வீடியோ பாடல் வெளியானது!

ABDI ABDI Song: தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து தற்போது, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என புதிய அவதாரம் எடுத்திருப்பவர் ரவி மோகன். இவரின் நடிப்பில் பேண்டஸி மற்றும் காதல் கதைக்களத்துடன் தயாராகியிருக்கும் படம்தான் ஜீனி. இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Genie Movie: கல்யாணி பிரியதர்ஷன் – கீர்த்தி ஷெட்டியின் நடனத்தில்…  ரவி மோகனின் ‘ஜீனி’ பட முதல் வீடியோ பாடல் வெளியானது!
ஜீனி பட முதல் பாடல்
Barath Murugan
Barath Murugan | Published: 07 Oct 2025 20:30 PM IST

தென்னிந்திய சினிமாவில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துவருபவர் ரவி மோகன் (Ravi Mohan). இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் இறுதியாக காதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2025 ஜனவரி மாதத்தில் வெளியான இப்படத்தை கிருத்திகா உதயநிதி தயாரித்திருந்தார். இந்த படத்தில் ரவி மோகனுடன், நித்யா மேனன் (Nithya menen), யோகி பாபு, வினாய் உட்பட பல்வேறு பிரபலங்ககள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து தனது நடிப்பில், பல படங்ககளையே கைவசம் வைத்திருக்கிறார் ரவி மோகன். அந்த வகையில் அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் (Bhuvanesh Arjunan) இயக்கத்தில், ரவி மோகன் நடித்துள்ள படம் ஜீனி.

இந்த படத்தில் அவருடன் நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan), கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty) மற்றும் வாமிகா கபி (Vamika Kabhi) உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் (AR.Rahman) இசையில் வெளியாகியிருக்கும் “ABDI ABDI” பாடலானது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க : கார் பறிமுதல் வழக்கில் துல்கர் சல்மானின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

ரவி மோகனின் ஜீனி திரைப்படத்தின் முதல் பாடல் :

இந்த ஜீனி திரைப்படத்தில் ரவி மோகன் முன்னணி நாயகனாக நடிக்கும் நிலையில், பேண்டஸி காதல் நிறைந்த கதைக்களத்தில் இந்த படமானது தயாராகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார்.

இதையும் படிங்க : மலையாள சினிமாவில் அதிக வசூல்.. கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ திரைப்படம் சாதனை!

மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடலான ABDI.. ABDI.. என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் வெளியான இந்த பாடல் தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

ஜீனி முதல் பாடல் தொடர்பான பதிவை வெளியிட்ட நடிகர் ரவி மோகன் :

இந்த ஜீனி படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகிறது. இப்படத்தின் VFX மற்றும் பின்னணி இசை தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறதாம். இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு டிசம்பர் அல்லது 2026ம் ஆண்ட பிப்ரவரியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.