Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த ரவி மோகன்!

Genie Movie: தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகர் ரவி மோகன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என இரண்டு புது அவதாரங்களை எடுத்துள்ளார். இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜீனி படத்தின் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த ரவி மோகன்!
ஜீனிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Oct 2025 21:33 PM IST

நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான பேப்பர் ராக்கெட் என்ற இணையதள தொடர்ன் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல இந்த காதலிக்க நேரமில்லை படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகனுடன் இணைந்து நடிகர்கள் வினைய், யோகி பாபு, நித்யா மேனன், லால் என பலர் நடித்து இருந்தனர். இந்தப் படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து கராத்தே மாஸ்டர், ஜீனி, பராசக்தி மற்றும் ப்ரோ கோட் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் ரவி மோகன்.

தொடர்ந்து சினிமாவில் நாயகனாக மட்டுமே வலம் வந்த நடிகர் ரவி மோகன் தற்போது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரிக்கவும் தொடங்கிவிட்டார். அதுமட்டும் இன்றி நடிகர் யோகி பாபுவை வைத்து அன் ஆர்டினரி மேன் என்ற ஒரு படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராகவும் ரவி மோகன் அறிமுகம் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை வெளியாகிறது ஜீனி படத்தின் முதல் சிங்கிள்:

நடிகர் ரவி மோகன் நாயனகான நடித்துள்ள படம் ஜீனி. ஃபேண்டசி காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகனுடன் இணைந்து நடிகர்கள் கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் ஜீனி படத்தின் முதல் சிங்கிள் குறித்து ரவி மோகன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி நாளை இரவு 8.10 மணிக்கு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… பாலிவுட் சினிமாவில் களமிறங்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

நடிகர் ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பைசன் தான் என் முதல் படம்னு நான் நினைக்கிறேன் – துருவ் விக்ரம் சொன்ன விசயம்!