இது வேற மாதிரியான ஆட்டம்… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்த சர்ச்சை இயக்குநர்!
Bigg Boss Tamil Season 9 : தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் பிரவீன் காந்தி. தற்போது இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது போல இவரின் சர்ச்சையான பேச்சுகளும் மக்களிடையே தொடர்ந்து வைரலானது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் சினிமாவில் கடந்த 1997-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரட்சகன். இந்தப் படத்தை இயக்குநர் பிரவீன் காந்தி (Director praveen Gandhi) இயக்கி இருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரவீன் காந்தி இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனா நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நடிகை சுஷ்மிதா சென் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் பலர் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரட்சகன் படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் பிரவீன் காந்தி இயக்கத்தில் அடுத்தடுத்து ஜோடி, ஸ்டார், துள்ளல், புலிப்பார்வை ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தொடர்ந்து படங்களை இயக்கியதன் மூலம் மக்களிடையே பிரபலமானதைவிட சமீப காலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவதாலேயே மக்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்த சர்ச்சை இயக்குநர்!
அந்த வகையில் சமீபத்தில் பேட்டியில் பேசிய போது தற்போதைய சினிமா தரம் கெட்டு போனதற்கு காரணம் இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித்தின் படங்கள் தான் காரணம் என்று தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரஞ்சித் எழுதி இயக்கி நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான C/o கவுண்டம்பாளையம் படத்தைப் பார்த்துவிட்டு நாடகக் காதல் மூலம் பெண்களை ஏமாற்றுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படி தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து மக்களிடையே நன்கு அறியப்பட்டவராக இருந்தார் இயக்குநர் பிரவீன் காந்தி. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதனால் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரவீன் காந்தி குறித்து அறிமுக வீடியோவை வெளியிட்ட நிகழ்ச்சி குழு:
#பிக்பாஸ் இல்லத்தில்.. #PravinGandhi 😎
Bigg Boss Tamil Season 9 #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason9 #TuneInNow #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV… pic.twitter.com/JawWOB7Q9Q
— Vijay Television (@vijaytelevision) October 5, 2025