மலையாள சினிமாவில் அதிக வசூல்.. கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ திரைப்படம் சாதனை!
Lokah Chapter 1 Chandra : கல்யாணி பிரியதர்ஷனின் முன்னணி நடிப்பில் கடந்த 2025 ஆகஸ்ட் இறுதியில் வெளியான படம் தான் லோகா. இந்த படமானது மலையாள சினிமாவில் அதிகம் வசூல் செய்து வெற்றி பெற்ற திரைப்படம் என்ற சாதனை படைத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் கடந்த 2025 ஆகஸ்ட் இறுதியில் வெளியான திரைப்படம்தான் லோகா சாப்டர் 1: சந்திரா (Lokah Chapter 1: Chandra). இந்த படத்தில் முன்னணி வேடத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக இளம் நடிகர் நஸ்லென் (Naslen) நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அதிரடி ஆக்ஷ்ன் நாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது உலகமெங்கும் சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், மலையாளத்தில் மட்டுமே சுமார் ரூ 110 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
ஒரு கதாநாயகியாக அதிக வசூல் செய்த நடிகை என்ற பெருமையும் நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த லோகா படமானது மலையாள சினிமாவிலே (Malayalam cinema) அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இது தொடர்பான பதிவு படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: Dude – LIK பட ரிலீஸ் சிக்கல்… புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படக்குழு!
லோகா படத்தின் சாதனை தொடர்பாக வெளியான பதிவு
#Lokah is officially the highest grosser ever in Kerala! Every screen, every ticket, every fan made this moment possible. Thanks to the whole Kerala Audience for making history with us 🙏❤️🤗#KalyaniPriyadarshan #LokahChapter1 #DulquerSalmaan #Naslen #TovinoThomas… pic.twitter.com/TzT0vn55p9
— MammoottyKampany (@MKampanyOffl) October 6, 2025
இந்த லோகா திரைப்படத்தை இயக்குநர் டோமினிக் அருண் இயக்க, நடிகரும் தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். இவரின் தயாரிப்பு நிறுவனத்தில் கீழ்தான் இந்த லோகா படமானது தயாராகியுள்ளது. இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ன், நஸ்லென் போன்றவர்களுடன், நடிகர்கள் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர்.
இதையும் படிங்க : வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளது
இந்த படமானது மலையாள மொழியை அடிப்படையாக கொண்டு வெளியாகியிருந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி ரசிகர்களையும் ஈர்த்தது என்றே கூறலாம். இந்த பாடானது கேரளாவில் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இப்படமானது எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்யாணி பிரியதர்ஷனின் புதிய படங்கள் :
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 2 படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம்தான் ஜீனி. இந்த படத்தில் நடிகர் ரவி மோகன், கீர்த்தி ஷெட்டி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இந்த படத்தை அடுத்ததாக கார்த்தியுடன் மார்ஷல் என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார். இந்த படமானது முற்றிலும் கடற்கரை சார்ந்த மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.