AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எஜமான் காலடி மண்ணெடுத்து… திரையரங்குகளில் வெளியாகி 33 ஆண்டுகளைக் கடந்தது எஜமான் படம்

33 Years Of Yajaman Movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் எஜமான். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவு செய்ததைப் படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது.

எஜமான் காலடி மண்ணெடுத்து… திரையரங்குகளில் வெளியாகி 33 ஆண்டுகளைக் கடந்தது எஜமான் படம்
எஜமான் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Feb 2026 19:23 PM IST

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று மக்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபஎஉம் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி 1993-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் எஜமான். இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிகை மீனா நடித்து இருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நடிகர்கள் எம்.என். நம்பியார், ஐஸ்வர்யா, மனோரமா, நெப்போலியன், விஜயகுமார், செந்தில், கவுண்டமணி, தளபதி தினேஷ், பீலி சிவம், ராஜேஷ் பாபு, ம. வரலட்சுமி, எஸ்.என்.லட்சுமி, சந்தியா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

33 ஆண்டுகளைக் கடந்தது எஜமான் படம்:

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரடெக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் மு. சரவணன், எம்.பாலசுப்ரமணியம் மற்றும் எம்.எஸ். குகன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்த நிலையில் எஜமான் படம் திரையரங்குகளில் வெளியாகி 33 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஏவிஎம் புரடெக்‌ஷன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கம்பீரமான ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் நடிகை மீனாவின் மறக்க முடியாத நடிப்பும் எஜமானை உண்மையிலேயே ஒரு சின்னமாக்கியது. 33 ஆண்டுகளுக்குப் பிறகும், அது இன்னும் பெருமை மற்றும் சக்தியின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தனுஷிடம் இருந்து நடிப்பு பற்றி நிறைய கற்றுக்கொண்டேன் – மமிதா பைஜூ

ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யாவின் படத்தை இயக்கும் இளம் இயக்குநர்? இணையத்தில் வைரலாகும் தகவல்