பூஜையுடன் தொடங்கியது ரியோவின் ராம் in லீலா படம்… வைரலாகும் போஸ்ட்
Ram in Leela Movie Shooting Update: நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் ராம் in லீலா. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் இன்று படத்தின் பூஜை நடைப்பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் பட்டியலில் இருப்பவர் நடிகர் ரியோ ராஜ். சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் ரியோ. இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ஜோ படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து நடிகர் ரியோ ராஜின் நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இவர் நாயகனாக நடித்து இந்த ஆண்டில் வெளியான ஸ்வீட் ஹார்ட் மற்றும் ஆண்பாவம் பொல்லாதது ஆகியப் படங்கள் இரண்டும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரியோ தற்போது அடுத்ததாக நடிக்க உள்ள படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.




பூஜையுடன் தொடங்கியது ராம் in லீலா படம்:
அந்த வகையில் நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடிக்க உள்ள படம் ராம் in லீலா. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்க உள்ள நிலையில் வர்த்திகா என்பவர் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்களை ரியோ ராஜ் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Also Read… ஓடிடியில் வெளியாகும் மாஸ்க் படம்… எங்கு எப்போது பார்க்கலாம்?
ரியோ ராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
With all Your Blessings Started our #RAMinLEELA ❤️🔥💫
Once again, with fresh talents, fresh suprises, lot of fun & entertainment. And it all begins now!
So excited to work with each and everyone !
Thank you so much 🫂 @actorvijaysethupathi na for coming and blessing our team🫂 pic.twitter.com/hd9POpLwoK— Rio raj (@rio_raj) December 3, 2025
Also Read… கம்ருதினால் பிக்பாஸ் வீட்டில் தொடரும் சண்டை… வைரலாகும் வீடியோ!