நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதி ஃபர்ஸ்ட் சாய்ஸ் கிடையாது – இயக்குநர் விக்னேஷ் சிவன் ஓபன் டாக்
Director Vignesh Shivan talks about Naanum Rowdy Dhaan movie casting: இயக்குநர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான நானும் ரௌடிதான் படத்தில் முதலில் நாயகனாக நடிக்க வைக்க யாரை யோசித்தார் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் நானும் ரௌடிதான். இந்தப் படத்தினை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி இருந்தார். இது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் பல முன்னணி நடிகர்களை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் வருகின்ற 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக உள்ள நிலையில் விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதி ஃபர்ஸ்ட் சாய்ஸ் கிடையாது:
அதன்படி விக்னேஷ் சிவன் கூறியதாவது, நானும் ரௌடிதான் படத்தில் முன்னதாக இசையமைப்பாளர் அனிருத்தை தான் நாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தோம். அதற்கான டெஸ்ட் ஷூட் எல்லாம் நடைப்பெற்றது. ஆனால் அந்த நேரத்தில் அனிருத் கத்தி படத்திற்கு இசையமைக்கும் பணியில் பிசியாக இருந்ததால் அவரால் படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகுதான் நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… நீங்க டெரரிஸ்டா? போலீசா? வெளியானது பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர்
இணையத்தில் வைரலாகும் விக்னேஷ் சிவன் பேச்சு:
#VigneshShivan:
“My first choice of #NaanumRowdyThaan was Anirudh as Hero and we even did a PhotoShoot with him, but #Kaththi got released after that & Ani said that he want to concentrate only on music. Then I went to #VijaySethupathi sir & VJS did one bad film. I asked VJS why… pic.twitter.com/IivJDS5a1u— AmuthaBharathi (@CinemaWithAB) April 5, 2026



