AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பார்வதியுடன் சென்று புது கார் வாங்கிய பிக் பாஸ் கம்ருதீன் – வைரலாகும் வீடியோ!

Kamurudin New Car: தமிழில் சின்னத்திரை நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கம்ருதீன். இவர் கடந்த 2025 -2026ல் வெளியான பிக் பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார். இவர் வி.ஜே.பார்வதியுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ளார். அது குறித்த வீடியோ இணையத்தில் வைரல்.

பார்வதியுடன் சென்று புது கார் வாங்கிய பிக் பாஸ் கம்ருதீன் – வைரலாகும் வீடியோ!
கம்ருதீன் மற்றும் பார்வதிImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Apr 2026 18:23 PM IST

தமிழில் கடந்த 2025 – 2026ம் ஆண்டு தொடக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை பெற்றிருந்தது என்று கூறலாம். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஒருவராக கருதப்பட்டவர் கம்ருதீன் (kamurudin). இவர் முதல் 20 போட்டியாளர்களின் ஒருவராக சென்று, ஆரம்பத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார். போகப்போக இவருக்கு ரசிகர்கள் குறைய தொடங்கியிருந்தது என்றே கூறலாம். அந்த வகையில் இந்த சீசனில் மிகவும் பிரபலமான ஜோடியாக பேசப்பட்டவர் கம்ருதீன் மற்றும் வி.ஜே.பார்வதி (VJ Parvathy). இவர்கள் இருவருமே இந்த சீசனில் பெரிய சண்டை மற்றும் ரெட் கார்ட் பெற்றிருந்தாலும், பின் பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது பிக் பாஸை தொடர்ந்து, பொது இடங்களிலும் வி.ஜே.பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருமே ஒன்றாக சுற்றித்திருவது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது கம்ருதீன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் மற்றும் விஜயிடம் உள்ள அதே ஸ்டைல் நயன்தாராவிடம் உள்ளது – இயக்குநர் விஷ்ணு எடவன்

புது கார் வாங்கியது குறித்து பிக் பாஸ் புகழ் கம்ருதீன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by Kamarudin K (@kamurudin)

இந்த வீடியோவில் கம்ருதீன் தனது நண்பர்கள் மற்றும் அவரின் தோழியான வி.ஜே.பார்வதியுடன் புதிய கார் வாங்குவதற்கு செல்வதுபோல இருக்கிறது. சமீப காலமாக வி.ஜே.பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருமே ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த விதத்தில் புதிய கார் வாங்கிய நிலையில், கேக் வெட்டி கொண்டாடும் விதத்தில் இந்த வீடியோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ரசிகர்கள் சிலர் வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.

இதையும் படிங்க: சீமான் சாருடன் பேசி எனது தமிழ் வளம் வளர்ந்தது – கிரித்தி ஷெட்டி பேச்சு!

கம்ருதீன் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிவந்த மகாநதி சீரியலில் முக்கிய நடிகராக நடித்துவந்தார். இந்த சீரியலில் நடித்து பிரபலமான இவர். கடமந்த 2025 ஆண்டு இறுதியில் ஆரம்பமான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்தார். இவர் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 100 நாட்கள் இருந்திருந்தார். பின் டாஸ்க் ஒன்றில் சாண்ட்ராவை தள்ளிவிட்ட விவகாரத்தினால், இவருக்கும் பார்வதிக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டிருந்தனர். தற்போது இவர் படங்களில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us