AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Actor Aryas Mr X Movie Release Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் உருவாகி உள்ள மிஸ்டர் எக்ஸ் படம் எப்போது வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
மிஸ்டர் எக்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Apr 2026 17:06 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் திரையுலகில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கடந்த 2005-ம் ஆண்டு சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய நடிகர் ஆர்யா ஆரம்ப காலக்கட்டத்தில் இரண்டாம் நாயகனாகவும் சின்ன சின்ன வேடத்தில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து ஜாலியான இளைஞர்களை கவரும் வகையில் உள்ள படமாகவே நடித்து வந்தார். அதன்படி அவர் அப்படி நடித்தப் படங்கள் எல்லாம் தற்போதுவரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் தற்போது வரிசையாக படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

தொடர்ந்து நடிகர் ஆர்யா கதையில் நாயகனாக நடித்து இறுதியாக படம் 2023-ம் ஆண்டே வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் இவர் படங்களில் கேமியோ வேடத்திலேயே நடித்துள்ளார். இந்த நிலையில் 2026-ம் ஆண்டில் தற்போது நடிகர் ஆர்ய நாயகனாக நடித்து உருவாகி உள்ள மிஸ்டர் எக்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அது குறித்த அப்டேட் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்:

அதன்படி நடிகர் ஆர்யா நாயகனாக நடித்து கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகாமல் கிடப்பில் கடந்த படம் மிஸ்டர் எக்ஸ். இந்தப் படத்தினை இயக்குநர் மனு ஆனந்த் எழுதி இயக்கி உள்ளார். பீரியட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த நிலையில் படம் இந்த ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டில் வெளியாகும் என்று நடிகர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Kaalidas 2: கிரைம் திரில்லர் கதையில்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா காளிதாஸ் 2 படம்? – விமர்சனங்கள் இதோ!

ஆர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வெற்றிகரமாக 3-வது வாரத்தில் அடியெடுத்து வைத்தது யூத் படம்

Follow Us