AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எங்க திருமண வாழ்க்கை சுமூகமாக இருப்பதற்கு சீக்ரட் இதுதான் – ரகசியம் பகிர்ந்த சுந்தர் சி மற்றும் குஷ்பு!

Khushbu And Sundar C: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருப்பவர் சுந்தர் சி. இவர் நடிகை குஷ்புவின் கணவரும் ஆவார். அந்த வகையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சுந்தர் சி மற்றும் குஷ்பு, தங்களின் வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் குறித்து தெரிவித்துள்ளனர்.

எங்க திருமண வாழ்க்கை சுமூகமாக இருப்பதற்கு சீக்ரட் இதுதான் – ரகசியம் பகிர்ந்த சுந்தர் சி மற்றும் குஷ்பு!
சுந்தர் சி மற்றும் குஷ்புImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Apr 2026 16:58 PM IST

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி, பின் இயக்குநர் மற்றும் நடிகராக முன்னேறியவர் சுந்தர் சி (Sundar C). தமிழ் சினிமாவில் ஹாரர் மற்றும் காமெடி படங்கள் என்றாலே மக்களின் நினைவிற்கு வருபவர் இவர்தான். அந்த வகையில் தொடர்ந்து படங்களை இயக்கி மற்றும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்துவருகிறார். இவர் தமிழ் நடிகை குஷ்புவின் (Khushbu) கணவரும் கூட. இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். அந்த வகையில் காதலித்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இவர்கள் இருவருக்குமே 2 பெண் பிள்ளைகள் இருக்கிறது. அந்த வகையில் நடிகை குஷ்பு, அவ்வப்போது சுந்தர் சி இயக்கம் படங்களில் நடித்துவருவது வழக்கம்.

மேலும் தற்போது சுந்தர் சி இயக்கியிருந்த மூக்குத்தி அம்மன் 2 படத்திலும், (Mookuthi Amman 2) மிக முக்கியமான வேடத்தில் குஷ்பு நடித்துள்ளார். இவர்கள் சினிமாவில் சிறந்த ஜோடியாக இருந்தாலும், தற்போது அரசியலிலும் இருவருமே இறங்கியுள்ளனர். அந்த வகையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த குஷ்பு மற்றும் சுந்தர் சி, தங்களின் சுமூகமான திருமண வாழ்க்கைக்கான ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தைரியமான பெண்களை குறிவைத்து கொலை செய்யும் கொலையாளி.. விறுவிறுப்பான இந்த படத்தை பார்த்திருக்கீங்களா?

தங்களின் வெற்றிகரமான வாழ்க்கை குறித்து குஷ்பு மற்றும் சுந்தர் சி பகிர்ந்த விஷயம்:

அந்த நேர்காணலில் தொகுப்பாளர் சுந்தர் சி மற்றும் குஷ்புவிடம் அவர்களின் திருமண வாழ்க்கை குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சுந்தர் சி, “எங்களின் திருமணம் நடப்பதற்கு முழுக்க காரணம் நான்தான். நான் நல்ல கணவர், குஷ்பு ரௌடி பேபி. எங்களின் பொறுமை மற்றும் நிதானமே எங்களின் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு காரணம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்த புகைப்படத்தில் கிருஷ்ணன் கெட்டப்பில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுதா? சீரியல் நடிகை டூ சினிமா நடிகையானவர் இவர்!

தொடர்ந்து பேசிய குஷ்பு, “ஒரே மாதிரியான குணம் கொண்டவர்களை திருமணம் செய்தால் வாழ்க்கையே போர்தான். நாங்கள் இருவருமே வேறு வேறு பாதையை கொண்டவர்கள். அதனால் எங்களுக்கு செட் ஆகிறது. சுந்தர் சி, ரொம்பவே சாந்தமானவர், அவருக்கு ரொமாண்டிகிற்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது. நான்தான் ரொம்ப ரோமெண்டிக்” என அதில் குஷ்பு தெரிவித்திருந்தார். தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

நடிகை குஷ்பு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

நடிகை குஷ்பு தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அரசியலிலும் முழு ஈடுபாட்டுடன் இருந்துவருகிறார். அந்த வகையில் சுந்தர் சி இயக்கம் படங்களில் சிறப்பு வேடம் மற்றும் சிறப்பு பாடல்களிலும் நடனமாடி சினிமாவில் உள்ள தனது ஆர்வத்தை குறையாமல் பார்த்துவருகிறார். அந்த வகையில் சினிமாவில் இவர்கள் இருவருமே சிறந்த ஜோடியாக கருதப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us