Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sundar C: படங்களில் கிளாமர் காட்சி.. வித்தியாசமாக விளக்கம் கொடுத்த சுந்தர்.சி!

Sundar C About Glamour Scenes : தமிழில் சிறந்த இயக்குநராகவும், பிரபல நடிகராகவும் இருந்து வருவார் சுந்தர் சி. இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய, இரு படங்களும் சூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து தற்போது இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் கேங்கர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது படங்களில் கிளாமர் காட்சிகள் இடம்பெறுவதைக் குறித்துப் பேசியுள்ளார்.

Sundar C: படங்களில் கிளாமர் காட்சி.. வித்தியாசமாக விளக்கம் கொடுத்த சுந்தர்.சி!
சுந்தர் சி
barath-murugan
Barath Murugan | Published: 22 Apr 2025 13:31 PM

இயக்குநர் சுந்தர் சி (Sundar C) இயக்கத்திலும், முன்னணி நடிப்பிலும், ரிலீசிற்கு தயாராகி வரும் படம் கேங்கர்ஸ் (Gangers). இந்த படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ளார். முற்றிலும் காமெடி மற்றும் கொள்ளை சம்பவங்கள் நிறைந்த கதைக்களத்துடன் இந்த படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சுந்தர் சி-க்கு ஜோடியாக நடிகை கேத்ரின் தெரசா (Catherine Teresa) மற்றும் வாணி போஜன் (Vani Bhojan) என இரு நடிகைகள் நடித்துள்ளனர். மேலும் வடிவேலுவின் (Vadivelu) காமெடி கதைக்களத்துடன் இந்த படமானது மிகவும் அருமையாகத் தயாராகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படமானது வரும் 2025, ஏப்ரல் 24ம் தேதியில் உலகமெங்கும் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சுந்தர்.சி , தனது திரைப்படங்களில் கிளாமர் காட்சிகளுடன், பாடல்கள் இடம் பெறுவதைக் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் எனது படங்களில் கிளாமர் காட்சிகள் இருக்கும், ஆனால் அது பார்ப்பதற்கு ஆபாசமாகத் தெரியாது என்று அவர் கூறியிருக்கிறார்.

கிளாமர் காட்சிகள் இடம்பெறுவது குறித்து இயக்குநர் சுந்தர் சி-யின் கருத்து :

அந்த நேர்காணலில் இயக்குநர் சுந்தர் சி, “எனது திரைப்படங்களை பெரும்பாலும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பார்க்கின்றனர். அதன் காரணமாக எனது திரைப்படங்களில் டபுள் மீனிங் கொண்ட வசனங்கள் அந்த அளவிற்கு இடம்பெறாது, அதை படங்களில் பயன்படுத்துவதை நான் விரும்புவதில்லை.. மேலும் எனது படங்களில் கிளாமர் காட்சிகள் இடம்பெறும், ஆனால் அவற்றைப் பார்ப்பதற்கு ஆபாசமாகத் தெரியாது, நான் படங்களின் கதைகளை எழுதும்போதே அந்த மாதிரியான விஷயங்களைத் தவிர்த்துவிடுவேன்” என்று இயக்குநர் சுந்தர் சி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

கேங்கர்ஸ் படக்குழு வெளியிட்ட பதிவு :

வடிவேலு மற்றும் சுந்தர் சியின் கூட்டணியில் பல ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள படம்தான் கேங்கர்ஸ். இந்த படத்தில் நடிகர் வடிவேலு பல கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் காமெடி கதைக்களத்துடன் உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் சுந்தர்.சி  இந்த படம் ஹாலிவுட் படமான மணிஹெய்ஸ்ட் படத்தின், காமெடி வெர்சனாக தமிழில் உருவாகியிருக்கும் படமாக  அமையும் என்று கூறியுள்ளார்.

சென்னையில் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை எங்கெல்லாம் நடக்கிறது..?
சென்னையில் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை எங்கெல்லாம் நடக்கிறது..?...
அப்போ சிம்பு சொன்ன இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனா?
அப்போ சிம்பு சொன்ன இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனா?...
பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியா.. டிரம்ப் சொன்ன முக்கிய விஷயம்
பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியா.. டிரம்ப் சொன்ன முக்கிய விஷயம்...
வார இறுதி & முகூர்த்த நாளில் சென்னையில் இருந்து பேருந்து சேவை
வார இறுதி & முகூர்த்த நாளில் சென்னையில் இருந்து பேருந்து சேவை...
குறையும் வெயில்.. அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை!
குறையும் வெயில்.. அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை!...
பதற்றம்.. பாகிஸ்தானுக்கு பதிலடியை துவங்கிய இந்தியா!
பதற்றம்.. பாகிஸ்தானுக்கு பதிலடியை துவங்கிய இந்தியா!...
போட்டியை புரட்டி போட்ட பும்ரா.. கடைசியில் குஜராத் செய்த சம்பவம்!
போட்டியை புரட்டி போட்ட பும்ரா.. கடைசியில் குஜராத் செய்த சம்பவம்!...
வயிறு உப்புசத்தால் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா?
வயிறு உப்புசத்தால் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா?...
திருமணம் நின்றுபோனதற்குக் காரணம் இதுதான்.. நடிகை த்ரிஷா !
திருமணம் நின்றுபோனதற்குக் காரணம் இதுதான்.. நடிகை த்ரிஷா !...
Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?
Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?...
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!...